Perambalur: A young man died after falling off his bike!
பெரம்பலூர் அருகே திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பைக்கில் சென்ற தானாக தவறி விழுந்த வாலிபர் சிகிச்சையின் போது உயிரிழந்தார்.
திருச்சி கே.கே நகரை சேர்ந்த, முகமது லுக்மான் மகன் முகமது சாபிக் (24), கடந்த பிப். 27ம் தேதியன்று அவருடைய பைக்கில் திருச்சியில் இருந்து பெரம்பலூர் வந்துவிட்டு மீண்டும் திருச்சிக்கு யமாகா பைக்கில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது இரூர் பஸ் ஸ்டாப் அருகே சென்ற போது, தானாக தவறி விழுந்தார். இதில், கை, கால்களில் காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர் பாடாலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். முகமது சாபிக்கை மீட்ட போலீசார் முதலுதவி செய்து, சிகிச்சைக்காக, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அவர் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த நிலையில், திருச்சி மருத்துவமனையில் உயிரிழந்தார். இது குறித்து பாடாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.