Perambalur: A youth who filmed women bathing was arrested!

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் 100-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்படும் வேளையில் அவரை அவமதிக்கும் வகையில் பெரம்பலூரில் உள்ள அவரது முழு திருவுருவ சிலையை அகற்றும் பெரம்பலூர் நகராட்சியின் தீர்மானத்தை கண்டித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்திலேயே அரசு அனுமதி பெற்று, பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் தான் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவுக்கு முழு உருவச் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இச்சிலை போக்குவரத்துக்கு இடையூறாகவும் விபத்து ஏற்படுத்தும்படி உள்ளதாகவும் கூறி பெரம்பலூர் நகர் மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

நகராட்சி நிர்வாகத்தின் சிலையை அகற்றும் முடிவை கண்டித்து பாமக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் பல்வேறு விவசாய சங்கங்கதினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் அதன் நிறுவனர் ஈசன் முருகசாமி தலைமையில் விவசாயிகள் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் சிலையை அகற்றும் நகராட்சி தீர்மானத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது நகராட்சியை கண்டித்து கோஷங்களையும் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்களின் நூறாவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தமிழக முதல்வர் அவருக்கு புகழ் சேர்க்கும் வகையில் கோவை மாநகர் பகுதியில் ஒரு பாலத்திற்கு அவரது பெயரும் தொடர்ந்து அவரது சொந்த ஊரான வையம்பாளையத்தில் நினைவு வளைவும் அமைக்கப்படும் என அறிவித்துள்ள வேலையில் சிலையை அகற்றக்கோரி நகராட்சி நிர்வாகம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது கண்டிக்கத்தக்கது எனவும், நகராட்சி நிர்வாகம் தீர்மானத்தை ரத்து செய்து சிலையை அகற்றும் முடிவை கைவிடாவிட்டால் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அனைத்து விவசாய சங்கங்களையும் ஒன்று திரட்டி பெரம்பலூர் நகராட்சி அலுவலகம் முன்பு தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனுவினை மாவட்ட ஆட்சியர் கிரேசை சந்தித்து வழங்கினர். மனுவைப் பெற்றுக் கொண்ட அவர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!