பெரம்பலூர் அருகே அரசு பேருந்து கவிழ்ந்ததில் 5 பெண்கள் உட்பட 7 பேர் காயமடைந்தனர்.
நேற்று இரவு சுமார் 7 மணியளவில் அரியலூரில் இருந்து அகரம் சீகூர் லப்பைக்குடிக்காடு வழியாக தொழுதூர் செல்லும் அரசு பேருந்து வந்து கொண்டிருந்த போது அகரம் சீகூர் அருகே எதிரே வந்த வாகனத்தின் மீது மோதமல் இருக்க பேருந்தை வேகமாக வலதுபுறம் திருப்பினார், அப்போது பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி சாலையின் அருகே உள்ள ஒரு பள்ளத்தில் கவிழ்ந்தது, பேருந்தினுள் பயணம் செய்த 20 பேர் காயமடைந்தனர்.
இதில் கழனிவாசல் கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் மனைவி நல்லம்மாள் (42). நமங்குணத்தை சேர்ந்த முத்துசாமியின் மனைவி சந்திரா (58), தொழுதூர் மணிவேல் மனைவி அன்னபூரனி (37), ஜெயச்சந்திரன் மனைவி தெய்வானை (40) புதுக்குளத்தை சேர்ந்த பெரியசாமி மனைவி மாலதி (27) , அகரம்சீகூர் இளையராஜாவின் மகன் புவனேஸ்வரன் (2), பேருந்து ஓட்டுநர் டிரைவர் சேகர் (56), ஆகிய 7 பேரும் படுகாயம் அடைந்தனர். இவர்கள் திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து மங்களமேடு காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.