Perambalur: Accident; Irur residents suddenly block the road, demanding the construction of a new flyover on the national highway!

பெரம்பலூர் மாவட்டம், இரூர் கிராமத்தில், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இக்கிராமத்தின் கிழக்கில் தாலூகா ஆபீஸ், யூனியன் ஆபீஜஸ், கருவூலம் போன்ற தாலூக அளவிலான அலுவலகங்கள் செயல்படுகின்றன. நாள்தோறும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து பொதுமக்கள் என பலதரப்பினர் வந்து செல்கின்றனர். மேற்கு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை கடந்து இரூர் கிராமத்திற்கு செல்லும் பாதை உள்ளது. இதனால் அன்றாட தேவைகளுக்கு பெரம்பலூர் சென்று மீண்டும் ஊருக்குள் செல்லும் மக்கள் சாலையை கடந்து தான் இரூருக்கு செல்ல வேண்டும். இதேபோல் கிழக்கு பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கும், மக்களும் சாலை கடந்து தான் செல்ல வேண்டும் நிலை உள்ளது.

இரூர் கிராமத்தின் அருகே 10 மேற்பட்ட கிரஷர்கள் செயல்பட்டு வருகிறது. இந்த கிரஷர்களுக்கு ஜல்லி, எம்.சாண்ட், பீ.சாண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் ஏற்றுவதற்காக நாள்தோறும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுப் புறத்தில் இருந்தும் டிப்பர், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் இரூர் பிரிவு சாலையில் தான் திரும்பி செல்கின்றனர். இன்று காலை திருச்சி சாலையில் இருந்து ஒரு டிப்பர் லாரி ஒன்று சாலையில் அஜாக்கிரதையாக திரும்பிய போது, அதே சாலையில் பின்னால் சென்னை நோக்கி சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் பைக்கில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது வேகமாக மோதி விபத்திற்குள்ளளானது, இதில் காயமடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தை கண்டித்து 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திருச்சி-சென்னை செல்லும் சாலையில் திடீர் சாலை மறியல் பேராட்டத்தில் ஒன்று திரண்டு குதித்தனர். இது குறித்து தகவலறிந்த பாடாலூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலந்து சென்றனர். சுமார் 45 நிமிடம் நடந்த போராட்டத்தில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதால், நீண்ட தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. போலீசார் இதனை சீர் செய்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!