admk-andharaj பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் இளம்பை.தமிழ்செல்வனை ஆதரித்து பெரம்பலூர் பழைய பஸ்நிலையம் மேற்கு வானொலி திடலில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரபல வில்லன் நடிகர் ஆனந்தராஜ் கலந்து கொண்டு பேசியதாவது,

பணியாற்றவில்லை என்றால் தண்டனை தருகிற ஒரே இயக்கம் அதிமுக தான்.இன்று பலருக்கும் வாய்ப்பு இல்லை. ஆனால் பெரம்பலூர் எம்.எல்.ஏ.,தமிழ்செல்வனின் சிறப்பான செயல்பாட்டால் மீண்டும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தல் களம் சற்று வித்தியாசமானது, எனவே வாக்காள பெரு மக்களாகிய நீங்கள் அனைவரும் ஜாதி, மதத்தை பார்த்து வாக்களித்திடாமல், அம்மா தொடர்ந்து சாதிக்க அதிமுகவிற்கு வாக்களித்திட வேண்டும்.

திமுக, பா.ம.க, தே.மு.தி.க. மற்றும் மக்கள் நலக்கூட்டணி கட்சி தலைவர்களை விமர்ச்சித்து பேசிய நடிகர் ஆனந்தராஜ், எம்பியாக இருக்கும் போது, தமிழக முதலமைச்சாராக பொறுப்பேற்று கொண்டவர் அன்புமணி ராமதாஸ் என்றும், எம்பியாக இருப்பவர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு முதல்வராக பொறுப்பேற்க முடியும், முதலில் தனது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து விட்டு சட்டமன்ற தேர்லில் அன்புமணி போட்டியிட வேண்டும்.

பா.ம-.க தலைவர் ராமதாஸ் எனது குடும்ப உறுப்பினர் எவரும் கட்சியின் பொறுப்புக்கு வந்தால் முச்சந்தியில் இருக்கிற புளிய மரத்தில் வைத்து சவுக்கால் அடியுங்கள் என்றார்.

அவர் கூறியபடி மரத்தில் கட்டி வைத்து அடிக்க வேண்டும் என்றால் இரண்டு ஆண்டுகள் பெரம்பலூரில் தான் ராமதாஸ் இருக்க வேண்டும். பரவாயில்லை நீங்கள் மரத்தை ரெடி பன்னுங்கள், சவுக்கு நம்மிடம் உள்ளது ஆளை நான் கூட்டி வருகிறேன்.

கட்டி வைத்து அடிப்பதில் நாங்கல்லாம் கில்லாடி பாட்ஷா படத்தில் ரஜினியையே கட்டி வைத்து தேலை உறித்தோம், ராமதாஸ் எங்களுக்கு சர்வ சாதாரணம் மன்னிப்பு கேளுங்கள் ராமதாஸ் அவர்களே, பாட்டாளி மக்கள் கட்சி ஆபத்தான கட்சி என்றும், இராமதாஸ் மனதில் தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் வன்னிய சமுதாயம் இருக்கும் இடத்தை தனியாக பிரித்து தனது மகனை முதல்வராக்க வேண்டும் என்ற தீய எண்ணம் இருக்கிறது.

நீங்கள் ஜாதிக்கு வாக்களிக்க வேண்டாம் புச்சித்தலைவி அம்மா அவர்கள் தொடர்ந்து சாதிக்க வாக்களியுங்கள். ராமதாஸ் கேட்பது போன்று அனைத்து ஜாதி கட்சிகளும் தனி மாநிலம் கேட்கிறது இது நல்லதற்கல்ல.

விஜயகாந்த் யார் என்பது, பிரேம லாதாவை விட எனக்கு தெரியும், புலன்விசாரனை படத்தின் 100 வது நாள் அன்றுதான் அவர்களது திருமணம். அந்த புன்னியவதி வந்த நேரம் விஜயகாந்தை வளர்ச்சிக்கு காரணமாக இரந்த இப்ராஹிம் வெளியே சென்ற விட்டார். குடும்பத்தை சேர்க்கவும் முடியும், பிரிக்கவும் முடியும் என்ற உதாரணத்திற்கு பிரேமலதா எடுத்து காட்டு, விஜயகாந்த் நண்பர்களை பிரிந்த காரணத்தால் தற்போது உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு கொண்டிருக்கிறார்.

இப்போது சிறுவர்களுக்கு காமெடி வேண்டும் என்றால் வடிவேலு, கவுண்டமணி காமெடி பார்க்க தேவையில்லை முடிந்து விட்டது, விஜயகாந்த் பேச்சை கேட்டால் போதும், இவர் அம்மாவை விமர்ச்சிக்கிறார். நான் கேட்கிறேன் நாளை நடக்க இருக்கும் கூட்டத்தில் யாருடைய துணையும் இல்லாமல் கூட்டணி கட்சி தலைவர்களின் பெயர் மற்றும் சின்னத்தை சொல்லி வாக்கு கேளுங்கள் பார்ப்போம். ஸ்டாலின் நமக்கு நாமே என்று மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறார்.

கடந்த 5 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தான் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது. தமிழக மக்கள் மிகவும் நிம்மதியாக இருக்கிறார்கள். இதனை நான் சொல்லவில்லை, மும்பை உள்பட வெளி மாநிலங்களில் இருந்து நடிக்க வரும் பல நடிகைகளும் தெரிவிக்கின்றனர்.

கடந்த திமுக ஆட்சியின் போது சினிமாத்துறையும், நிம்மதியாக, சுதந்திரமாக வாழ முடியவில்லை. சன்டிவி குழுமத்தில் நடிக்க வில்லை என்றால் நாங்கள் நடிகனாக இருக்க முடியாது என்ற நிலை இருந்து வந்தது. தெலைக்காட்சி உள்ளிட்ட ஊடகத்தினரும் சுதந்தரமாக செயல்பட அதிமுக அரசு தான் காரணம்.

2011க்கு பிறகு தான் நமக்கே சுதந்திரம் கிடைத்து எனவே அந்த சுதந்திரம் வீடித்து, நிலைத்திருக்க வேண்டும் என்றால் அதிமுகாவிற்கு வாக்களிக்க வேண்டும் என்றார். கட்சி பிரமுகர்கள் பலர் உடனிருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!