Perambalur: Administrators should work to defeat DMK in the 2026 assembly elections: Interview with Puthiya Tamilagam Party leader Dr. Krishnasamy!

பெரம்பலூரில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் நடந்த இட ஒதுக்கீடு மீட்பு கருத்தரங்கம், நிர்வாகிகள் கருத்து கேட்பு ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் அருண்குமார் தலைமையில் நடந்தது. ஒன்றிய செயலாளர்கள் மதியழகன், சிவசூரியன் , சதீஷ்குமார், நகர செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அக்கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

தமிழகத்தில், அருந்ததியர் சமுதாய மக்களுக்கு 3 சதவீத ஒதுக்கீடு மட்டுமல்லாமல், 15 சதவீதத்திலும் இட ஒதுக்கீடு அளிப்பதால் 70% சதவீதத்திற்கும் மேற்பட்ட சமுதாய மக்கள் பாதிக்கப்படுவார்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இந்த நடைமுறை இல்லை. எனவே 3% இட ஒதுக்கீடு அளிப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் மேலும், இட ஒதுக்கீடு வழங்குவதை கண்டித்து புதிய தமிழகம் கட்சி சார்பில் பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். இதற்கான விழிப்புணர்வை அனைத்து மாவட்டங்களிலும் புதிய தமிழகம் கட்சி ஏற்படுத்தி வருகிறது.

இன்று சட்டசபையில், 312 பக்கங்களுக்கு மேல் நிதிநிலை அறிக்கை படித்துள்ளார்கள். இதை ஒரு அறிக்கையாகத்தான் அதனை பார்க்க முடிகிறது. 2026 தேர்தலை மையமாக வைத்தே அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்கள். ஏழ்மையில் உள்ள மக்களுக்கான எந்தவித திட்டமும் பட்ஜெட்டில் இல்லை.

தமிழகத்தில் கடந்த 6 மாதங்களாக 100 நாள் வேலை திட்டத்தில் பெண்களுக்கு சம்பளம் கிடைக்கவில்லை. 3 ஆயிரத்து 796 கோடி ரூபாய் நிலுவை உள்ளது. அதை வாங்குவதற்கு மத்திய அரசோடு, திமுக அரசு இணக்கமாக இல்லை. எல்லாவற்றிலும் மோதல் போக்கை கடைபிடிப்பதால் தமிழ்நாட்டிற்கு வந்து சேர வேண்டிய நிதி வரவில்லை. தமிழகத்தில் எந்த விதமான வளர்ச்சியும் இல்லை. அவர்கள் கட்சியை சேர்ந்த குடும்ப உறுப்பினர்கள் தான் பயனடைகிறார்கள். எனவே 2026-ல் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தே தீரும்.

கடந்த 2023-ம் ஆண்டிலேயே டாஸ்மாக்கில் ஒரு லட்சம் கோடிக்கு குறைவில்லாமல், பல வழிகளில் ஊழல் நடந்ததாக, நான் விளக்கமாக குறிப்பிட்டு கவர்னிடம் புகார் மனு அளித்துள்ளேன். அமலாக்கத்துறை தமிழக டாஸ்மாக் ஊழல் குறித்து 100 மடங்கு குறைவாகத்தான் மதிப்பிட்டுள்ளார்கள். எனவே இதனை இன்னும் விரிவாக அமலாக்கத்துறை விசாரணை செய்து தமிழக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

தமிழகத்தில் மும்மொழி கொள்கையை அமல்படுத்தவேண்டும். மும்மொழி கொள்கையை அமல்படுத்தமாட்டேன் என தமிழக அரசு கூறுவது அரசியல் சாசனத்திற்கு எதிரான செயல், மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் நூறாண்டு குடியிருந்தவர்களை வெளியேற்றினார்கள். அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை. போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அளித்த வாக்குறுதி நிறைவேற்றவில்லை. அப்படி இருக்கையில் மத்திய அரசை குறை கூறுவது ஏற்புடையது அல்ல.

கூட்டணியில் இருந்தாலும் திமுக இனி வெற்றி பெற முடியாது. திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்ற அலை மெதுவாக எழுந்து வருகிறது. தமிழகத்தில், கூட்டணி இல்லாமல் எந்தக் கட்சியாலும் தேர்தலில் போட்டியிட முடியாது. தனிக்கட்சி ஆட்சி இருக்காது. எனவே புதிய தமிழகம் கட்சி 2026 தேர்தலில் ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்ற நிலைப்பாட்டுடன் கூட்டணி அமைப்போம். தேர்தல் நேரத்தில் இது மெகா கூட்டணியாக அமையும் என தெரிவித்தார்.

திமுக அரசு தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறது. டாஸ்மாக்கில் இமலாய ஊழல் நடந்துள்ளது. இது குறித்து கடந்த 2 ஆண்டுகளுகக்கு முன்பு புதிய தமிழகம் சென்னையில் பேரணி நடத்தி கவனர்னிடம் மனு கொடுத்தோம். மும்மொழி கொள்கையை கடைபிடிக்காமல் மத்திய அரசிடம் மோதல் போக்கை திமுக அரசு கடைபிடிக்கிறது. இது போல் திமுக அரசு மக்களுக்காக செயல்படாமல் தனது குடும்ப உறுப்பினர்களுக்காக செயல்பட்டு வருகிறது. திமுக அரசின் இந்த அவலநிலையை மக்களிடம் எடுத்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் 2026 சட்டசபை தேர்தலில் திமுகவை தோற்கடிக்க நிர்வாகிகள் செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.

இதில் மாவட்ட அணி அமைப்பாளர்கள் மணிகண்டன், பிரகாஷ், மற்றும் ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!