Perambalur: Agniveer Vayu recruitment camp: Collector information!
இந்திய விமானப் படையால் நடத்தப்படவுள்ள அக்னிவீர் வாயு தேர்விற்கான ஆட்சேர்ப்பு முகாம் (மருத்துவ உதவியாளர் பிரிவு) 28.01.2025 முதல் 06.02.2025 வரை நடைபெறவுள்ளது.
இம்முகாமில், மருத்துவ உதவியாளர் (பொது) விண்ணப்பதாரர்களுக்கு 29.01.2025 அன்றும், மருத்துவ உதவியாளர் (Pharmacist) விண்ணப்பதாரர்களுக்கு 04.02.2025 அன்றும் கேரள மாநிலம், கொச்சி, எர்ணாகுளத்தில் உள்ள மகாராஜாஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. மருத்துவ உதவியாளர் பணிக்கு 03.07.2004-க்கு பிறகு 03.07.2008-க்கு முன்னதாக பிறந்துள்ள ,10, +2 or Diploma / BSC Pharmacy படித்த திருமணமாகாத ஆண்கள் மட்டும் பங்கு பெறலாம். மருத்துவ உதவியாளர்(Pharmacist) பணிக்கு Diploma/Bsc Pharmacy படித்த, 03.07.2001-க்கு பிறகு 03.07.2006-க்கு முன்னதாக பிறந்துள்ள திருமணமாகாத ஆண்களும், 03.07.2001-க்கு பிறகு 03.07.2004 முன்னதாகவும் பிறந்த திருமணமான ஆண்களும் பங்குபெறலாம்.
மேலும், இத்தேர்வு குறித்த கூடுதல் விவரங்களுக்கு http://agnipathvayu.cdac.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக அறியலாம். இந்திய விமானப் படையில் இணைந்து பணியாற்ற விரும்பும் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த ஆர்வலர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயன் பெறலாம். என கலெக்டர் கிரேஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.