Perambalur: AIADMK Candidate Elambai R. Tamilselvan Files Nomination Papers!

பெரம்பலூர் தனித் தொகுதிக்கு அதிமுக வேட்பாளார் இளம்பை இரா.தமிழ்ச்செல்வன் இன்று தனது மற்றும் கூட்டணி கட்சியினருடன் வந்து வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் அனிதாவிடம் தாக்கல் செய்தார்.

அப்போது பாமக மாவட்ட செயலாளர் செந்தில்குமார், பாஜக மாநில இணைப் பொருளாளர் மா சிவசுப்பிரமணியன், அதிமுக வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் டி.என். சிவப்பிரகாசம், முன்னாள் எம்.எல்‌.ஏ பூவை.செழியன் ஆகியோர் உடன் இருந்தனர். அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளை பொறுப்பாளர்கள், தொண்டர்கள், பல்வேறு சார்பு அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

வேட்பு மனுதாக்கல் செய்த வேட்பாளர் இளம்பை இரா. தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களை சந்தித்தார். தான் 10 ஆண்டுகால் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்ட மன்ற உறுப்பபினராக இருந்த போது செய்த பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை எடுத்துரைத்தார். தற்போது தொகுதியில் நல்ல வரவேற்பு இருப்பதால் அதிக அளவிலான வாக்குகள் வித்தியாசத்தில் மக்கள் தன்னை வெற்றி பெறச்செய்வார்கள் என தெரிவித்தார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!