Perambalur: AIADMK Candidate Elambai R. Tamilselvan Personally Visits and Offers Consolation to Families Affected by Fire Accident!

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், தழுதாழை அருகே உள்ள தாழைநகர் கிராமத்தில் ஏற்பட்ட தீவிபத்தால் வீடு எரிந்து சேதமடைந்த குடும்பத்தினரை பெரம்பலூர் அதிமுக மாவட்ட செயலாளரும், சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளருமான இளம்பை.இரா.தமிழ்ச்செல்வன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

தாழைநகர் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் மனைவி தனலட்சுமி தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார். நேற்று ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் தனலட்சுமியின் வீடு சேதமடைந்து பாதிப்பிற்குள்ளாகினர்.
இந்த சம்பவத்தை அறிந்த பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், பெரம்பலூர் தொகுதி அதிமுக வேட்பாளருமாக இளம்பை.இரா.தமிழ்ச்செல்வன் உடனடியாக சம்பவ இடத்துக்கு கட்சியினருடன் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமைந்தவுடன், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு புதிய வீடு கட்டித் தரப்படும் எனவும் உறுதியளித்தார்.

வேப்பந்தட்டை அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் டி. என். சிவப்பிரகாசம், மாவட்ட இணை செயலாளர் ராணி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் வீரபாண்டியன், மாவட்ட மீனவர் அணி செயலாளர் முருகேசன், மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் கே.என்.ராமசாமி, மாவட்ட இலக்கிய அணி தலைவர் துரை உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!