Perambalur AIADMK candidate Elambai R. Tamilselvan receives an enthusiastic welcome, greeted with Aarti performed using a tray of vegetables!

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக இளம்பை.இரா. தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார். இந்நிலையில் நேற்று ஆலத்தூர் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அடைக்கம்பட்டியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது பெண்கள் ஆரத்தி தட்டுகளில் வாழக்காய், வெங்காயம், முள்ளங்கி, மாங்காய் உள்ளிட்ட காய்கறிகளை வைத்து வித்தியாசமான முறையில் ஆரத்தி எடுத்து அதிமுக வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. பின்னர், அதிமுக தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துரைத்து, மங்கூன், நக்கசேலம், புதுவிராலிப்பட்டி, ஈச்சம்பட்டி, தேனூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார். அப்போது அதிமுக உள்ளிட்ட கூட்டணி நிர்வாகிகள், தொண்டர்கள் திராளக உடன்சென்றிருந்தனர்.











kaalaimalar2@gmail.com |
9003770497