பெரம்பலூரில் இன்று நடிகர் குண்டு.கல்யாணம் அதிமுக வேட்பாளர்கள் இரா.தமிழ்ச்செல்வன், (பெரம்பலூர்), ஆர்.டி. இராமச்சந்திரன் ( குன்னம்) ஆகியோரை ஆதரித்து இன்று நடிகர் குண்டு கல்யாணம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட குண்டு கல்யாணம் பேசியதாவது:
முதலமைச்சர் ஜெயலலிதா நமக்கு அற்புதமான திட்டங்களை கொடுத்துள்ளார்கள். 20 கிலோ விலையில்லா அரிசி கொடுத்து தமிழகத்திலே பட்டினி என்பது இல்லை என்கின்ற நிலைமையை உருவாக்கி இருக்கிறார்கள்.
மக்களுக்கு தேவையான மிக்சி, கிரைண்டர் கறவைமாடுகள், ஆடுகள், தாலிக்கு அரை சவரன் தங்கம் என பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார்கள்.
ஊரில் யார் பார்த்தாலும், நான் தான்முதலமைச்சர், நான் தான் முதலமைச்சர் வேட்பாளர் என அறிவித்து கொள்கிறார்கள். ஆனால், ஒரிஜினலாக இருக்கிற முதலமைச்சரான அம்மா அமைதியாக இருக்கிறார்கள்.
நாட்டை அம்மாவை தவிர யாராலும் காப்பாற்ற முடியாது என பேசினார்.
அரசாங்கதத்தை குறை முடியாமல் கும்பிடுவதை குறை சொல்கிறார். குடம்பிடுவது நம் மரபு என பேசினார்.
கட்சி பிரமுகர்கள் சிதம்பரம் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் சந்திகாசி, முன்னாள் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற பொருளார் எம்.என்.ராஜராம், ஒன்றிய செயலாளர்கள் கர்ணன் (ஆலத்துர்) வேப்பந்தட்டை சிவப்பிரகாசம், நகர செயலாளர் ராஜபூபதி உள்பட கட்சி பிரமுகர்கள் ,மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.
இதே போல் குன்னம் மற்றும் புதுவேட்டக்குடியில் நடிகர் குண்டு.கல்யாணம், ஆர்.டி. இராமச்சந்திரன் வாக்கு சேகரிப்பின் போது சிதம்பரம் தொகுதி எம்.பி மா. சந்திரகாசி, வேப்பூர் ஒன்றிய செயலாளர் புதுவேட்டகுடி கிருஷ்ணன், ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் கர்ணன் உட்பட கட்சி பிரமுகர்கள் மற்றும் ஊடக பிரிவு மாவட்ட செயலாளர் பெருமாள் ஏராளமானோர் உடனிருந்தனர்.