Perambalur: All parties protest against the municipality for removing the statue of leader Narayanasamy Naidu and installing a statue of an Kalaignar!

தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில், பெரம்பலூர் அண்ணா பஸ் ஸ்டாண்டில், உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் முழு உருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துக்கு இடையூறாக சிலை உள்ளதாக கூறி நாராயணசாமி நாயுடுவின் சிலையை அகற்ற அண்மையில், பெரம்பலூர் நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை கண்டித்தும், சிலையை அங்கிருந்து அகற்ற எதிர்ப்பு தெரிவித்தும் தமிழக விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் ஏற்கனவே பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளது.

இந்நிலையில் இன்று நாராயணசாமி நாயுடுவின் 100வது பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பலூரில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் விவசாய சங்கங்கள், உள்ளிட்ட தன்னார்வமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் சிலையை அகற்றும் நகராட்சி நிர்வாகத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சிலையை அங்கிருந்து அகற்றக்கூடாது என்று வலியுறுத்தியும் தேமுதிக சார்பில் அதன் மாவட்ட செயலாளர் சிவா.ஐயப்பன் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அதன் மாவட்ட தலைவர் முத்தமிழ் செல்வன் ஆகியோர் தலைமையிலும், தமிழ்நாடு நாயுடு கூட்டமைப்பு சார்பில் அதன் மாநில செயலாளர் ரங்கராஜ் நாயுடு,பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வன்னியர் சங்க மாநில செயலாளர் வைத்தி, தமிழ்நாடு உழவர் பேரியிக்கத்தின் மாநில தலைவர் ஆலயமணி தலைமையிலும், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் இந்த சிலையை அகற்றி விட்டு, அப்பகுதியில் கலைஞர் சிலை வைக்க ஏற்பாடு நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது என்றும், அப்படி செய்தால் மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் நகராட்சி நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!