Perambalur: Almighty Public School students came first in the state-level Silambam competition! Chairman A. Ramkumar congratulates them!
தமிழ்நாடு அளவிலான, சிலம்பப்போட்டி கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் நடந்தது. இதில், தமிழ்நாட்டிகன் பல்வேறு மாவட்டத்தின் பல்வேறு இருந்து கலந்து கொண்டனர். பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டனர். பதக்கங்கள், பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் வெற்றிக் கோப்பைகளை ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளி மாணவர்கள் தட்டி சென்றதோடு, மாநில அளவில் முதல் இடத்தையும் பெற்றனர்.
போட்டியில் வெற்றி பெற்று வந்த ஆல்மைட்டி வித்யாலயா மாணவர்களையும், பயிற்சியாளர் செந்தில் உள்ளிட்டோரை பள்ளியின் சேர்மன் முனைவர் ஆ.ராம்குமார் வாழ்த்தி பாராட்டினார். முதல்வர்கள் சாரதா, சந்திரோதயம் ஆகியோர் உடனிருந்தனர்.