Perambalur: Almighty School won the National Level 2nd Place Champion Trophy by winning 18 gold, 13 silver, and 8 bronze medals!
திருப்பூரில், 14-வது தேசிய அளவிலான தற்காப்பு கலை திருவிழா நடந்தது. தலைவர் சண்முகசுந்தரம் போட்டியை தொடங்கி வைத்தார். இதில் கேரளா மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 600 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு சார்பில், பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளி மாணவிகள் பங்கேற்று 18 தங்கம் 13 வெள்ளி, 8 வெண்கல பதக்கங்களையும் பெற்றனர். ஆல்மைட்டி பப்ளிக் பள்ளி தேசிய அளவிலான ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்திற்கு, 2-ம் இடத்திற்கான கோப்பையை பெற்று வெற்றி வாகையையும் சூடினர்.
பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவியர்களையும், டேக்வாண்டோ பயிற்சியாளர் மேனகாவை, பள்ளி சேர்மன் முனைவர் ஆ.ராம்குமார் மற்றும் முதல்வர்கள் சாரதா சந்திரோதயம் மற்றும் துணை முதல்வர் ராஜேந்திரன் ஆகியோர் பாராட்டி வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.