Perambalur: Ambedkar’s birthday; Paying homage by garlanding the portrait, statement by district DMK in-charge V. Jagatheesan!
பெரம்பலூர் மாவட்டத்தில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட திமுக அலுவலகத்தில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, உறுதிமொழி ஏற்கப்படுகிறது. இது குறித்து
மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆணைக்கினங்க, திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா, எம்.பி., வழிகாட்டுதல்படியும், போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆலோசனையின் பேரில், பெரம்பலூர் மாவட்ட தி.மு.க.சார்பில், அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு சமத்துவ நாளாக கொண்டாடப்பட உள்ளது. மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் ஆகிய எனது தலைமையில்,சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் முன்னிலையில்,
பாலக்கரை அருகே உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில், நாளை 14.04.2025-( திங்கட்கிழமை) காலை 10.00 மணிக்கு, அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, உறுதிமொழி ஏற்கப்படவுள்ளது.
அது சமயம் மாநில நிர்வாகிகள், மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய,நகர, பேரூர் கழகச் செயலாளர்கள், மாவட்ட அணைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், வார்டு, கிளைச் செயலாளர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன், என அதில் தெரிவித்துள்ளார்.