Perambalur: Amma pharmacies to become CM pharmacies; What has been given to the cooperative sector? Public demands that agency be given to private sector!

கடந்த ஆட்சியில் மருந்து மாத்திரைகளை வெளியில் அதிக விலைக்கு வாங்கி மக்கள் மேலும், சிரமப்படக்கூடாது என்ற நோக்கில் திறக்கப்பட்டவைகள் தான் அம்மா மருந்தகங்கள். ஆனால், கூட்டுறவுத் துறை வசம் ஒப்படைக்கப்பட்டதால் திறம் பட செயல்படவில்லை. லாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்பட்டது. பெரும்பாலான கடைகளில் மக்களுக்கு தேவையான மருந்துகள் உரிய காலத்தில் இருப்பு இல்லாததால் மக்கள் மீண்டும் தனியார் மருந்து கடைகளுக்கு திரும்ப சென்றனர். இதனால், மருந்துக் கடை மந்தமானது. இதனால் பெரும்பாலான கடைகள் நஷ்டத்தில் இயங்கின. இதற்குள் விழித்துக் கொண்ட தனியார் மருந்து நிறுவனங்கள், மெடிக்கல் கடைகளில் கூட்டுறவுத் துறையின் அம்மா மருந்தகத்தை விட கூடுதல் தள்ளுபடி கொடுக்க ஆரம்பித்ததால், கொஞ்சம்நஞ்சம் இருந்த வியாபாரம் படுதோல்வியை சந்தித்ததோடு காற்று வாங்கியது.

தற்போது, பெரும்பாலான அம்மா மருந்தகங்களே முதல்வர் மருந்தகங்காளாக செயல்பட உள்ளன. ஆனால், இதை கூட்டுறவுத் துறை நடத்தப்போவதால் பெரும் இழப்பு கண்க்கை மட்டுமே காட்டுவார்கள். எனவே, கூட்டுறவுத் துறைக்கு வழங்காமல், தனியாருக்கு பிரான்சிஸ் வழங்கு வேண்டும் என்றும், மத்திய அரசு நடத்தி வரும் ஜெனரிக் மெடிக்கல் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதை போல, திறமை மிக்க நபர்களுக்கு பிரான்சிஸ் வழங்குவதோடு, முதல்வர் மருந்தகத்தில், ஜெனரிக் மருந்துகளையும் விற்கவேண்டும். உதாரணத்திற்கு, Paracetamol 650 MG Tablet 10 மாத்திரை கொண்ட அட்டை ஒன்று தனியார் மருந்தகத்தில் ரூ.110 க்கும், மத்திய அரசின் ஜெனரிக் மெடிக்கலில் ரூ.8 -க்கு விற்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள் வரிப்பணம் மக்களுக்கு பயன்படும் வகையில் முதல்வர் மருந்தகங்களை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!