Perambalur an office assistant at the district employment office vacant apply – collector
மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் விடுத்துள்ள தகவல் :
பெரம்பலுர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள ஓர் அலுவலக உதவியாளர் பணிகாலியிடத்திற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்பணியிடத்திற்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 01.07.2016 அன்றைய தேதியில் குறைந்த பட்ச வயது 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.
இனவாரி சுழற்சி எஸ்.சி. அருந்ததியர் பெண்கள்-ஆதரவற்ற விதவை (SCA -Women-Destitute Widow) ஆகும். தகுதி வாய்ந்த ஆதரவற்ற விதவைகள் இல்லை எனில் எஸ்.சி.அருந்ததியர் பெண்கள்- முன்னுரிமையற்றோர் (SCA-Women-NonPriority) பிரிவை சார்ந்தவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
மேற்கண்ட நிபந்தனைக்குட்பட்ட தகுதியான எஸ்.சி. அருந்ததியர் பெண்கள் தங்களது விண்ணப்பத்தினை 16.08.2016-ஆம் தேதிக்குள் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம், என தெரிவித்துள்ளார்.