நடைபெறவுள்ள சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் இன்று மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
பெரம்பலூர் மாவட்டத்தை பொருத்த வரையில் உள்ள மொத்த மக்கள் தொகை 7,25,128 ஆகும். இதில் 5,30,828 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.
இதில் பெரம்பலூர் தொகுதியில் ஆண்கள் 1,35,127 வாக்காளர்களும், 1,40,792 பெண் வாக்காளர்களும், இதர 13 நபர்களும் என மொத்தம் 2,75,932 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
குன்னம் தொகுதியில் ஆண்கள் 1,26,996 நபர்களும், பெண்கள் 1,27,889 நபர்களும், இதர 11 நபர்களும் என மொத்தம் 2,54,896 நபர்கள் வாக்களிக்க உள்ளனர்.
பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் 320 வாக்குசாவடிகளும், குன்னம் தொகுதியில் 316 வாக்குச்சாவடி மையங்கள் என மொத்தம் 636 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாக்குச்சாவடி மையங்களில் பெரம்பலூரில் 30 மையங்களும் குன்னத்தில் 39 மையங்கள் என 69 மையங்கள் பதற்றம் நிறைந்தவையாக இனம் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணிக்காக கூடுதல் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்கள் சிரமமின்றி வாக்களிக்க தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்ப்படுத்தப்படும். மேலும் மாற்றத்திறனாளிகளும் தேர;தலில் வாக்களிக்க அனைத்து வாக்குசாவடி மையங்களிலும் சாய்தளபாதை கொண்ட நடைமேடை அமைக்கப்பட உள்ளன.
மேலும் தொகுதிக்கு 4 வாக்குச்சாவடி மையங்கள் என 8 மகளிர் வாக்குசாவடி மையங்கள் அமைக்கப்படவுள்ளன. இவ்வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியும் அனைத்து அலுவலர;களும் மகளிர் ஆவர். மேலும் பொதுமக்களிடையே வாக்களிக்கும் எண்ணத்தை அதிகப்படுத்திடவும், வாக்களிக்கும் ஆர்வத்தை அதிகரித்திடவும் அனைத்து வசதிகளையும் உள்ளடடிக்கிய மாதிரி வாக்குச்சாவடிகள் தொகுதிக்கு ஒன்று வீதம் 2 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படும்.
பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள இரண்டு தொகுதிகளிலும் பயன்படுத்துவதற்காக சுமார் 841 மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களும், 1360 கட்டுப்பாட்டுக் கருவிகளும் கொண்டுவரப்பட்டு முதற்கட்ட பரிசோதனைகள் முடிந்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் தேர்தலை சுமுகமாக நடத்திட இரண்டு தொகுதிகளிலும் உள்ள 636 வாக்குச்சாவடி மையங்களும் 63 மண்டங்களாக பிரிக்கப்பட்டு அதற்காக மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்தொகுதிக்கு 7 தனிப்படைகள் வீதம் 14 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேர்தல் விதிமுறைமீறல்களை 24 மணி நேரமும் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். எனவே; ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் கொண்டு செல்லும் பொதுமக்கள், அதற்குரிய ஆவணங்களுடன் கொண்டு செல்ல வேண்டும்.
உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுசெல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்படும். தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக புகார் தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
18004257031 என்ற கட்டமில்லா தொலைபேசியில் தேர்தல் தொடர்பான வதிமீறல்கள் குறித்து புகார்கள் அளிக்கலாம்.
இந்த கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் இயங்கும் என தெரிவித்தார்.