Perambalur: Announcement in the Legislative Assembly to convert the municipality into a corporation, DMK members celebrated by bursting crackers and distributing sweets to the public
பெரம்பலூர் நகராட்சியை மாநகராட்சியாக, சட்டமன்றத்தில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கேஎன்.நேரு அறிவித்தார். இதற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து, பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் தலைமையில், மாவட்ட திமுக அலுவலகம்,
புதிய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது. பேருந்தில் பயணம் செய்த பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில், மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் இரா.ப.பரமேஷ்குமார், மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் அப்துல் பாரூக், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் அ.அப்துல்கரீம், மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் எம்.மணிவாசகம், நகராட்சி உறுப்பினர்கள் சேகர், ஷாலினி, சித்தார்த்தன், ஜெயப்பிரியா, மணிவேல், மாவட்ட கலை இலக்கிய பேரவை துணை அமைப்பாளர் ந.முத்துச்செல்வன் மற்றும் வழக்கறிஞர் கண்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.