Perambalur: Applications Invited for Agniveer Posts ; Collector Informs!

Model
அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் அக்னிவீர் ( General Duty, Technical, All Tradesman, Clerk, Store Keeper Technical ) போன்ற பணியிடங்களுக்கு பொது நுழைவு தேர்விற்கான அறிவிக்கை www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், விருதுநகர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, திருநெல்வேலி, இராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் 17½ (பதினேழரை) வயது முதுல் 22 வயதிற்கு உட்பட்ட திருமணமாகாத ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் இத்தேர்விற்கு 13.02.2026 முதல் 01.04.2026 வரை இணைய வழியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தேர்வு நடைபெறும் நாள் 1.6.2026 முதல் 15.6.2026 வரை ஆகும். மேலும் விவரங்கள் மற்றும் உதவிகளுக்கு மேற்குறிப்பிட்ட இணையதளம் மற்றும் இராணுவம் ஆட்சேர்ப்பு அலுவலகம், கருடா லைன்ஸ் திருச்சி – 620 001 என்ற முகவரியிலும், 0431 – 2412254 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.










kaalaimalar2@gmail.com |
9003770497