Perambalur: Are there violations of the Election Model Code of Conduct in the district? Report them without hesitation; appropriate action will be taken regarding your complaints ; District Collector.

23.04.2026 அன்று நடைபறெவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலை சுமூகமாகவும் வெளிப்படைத் தன்மையுடன் நடத்திட ஏதுவாக இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேர்தரல் நடத்தை விதிமீறல்கள் குறித்த தகல்களை தெரிவிக்க பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் அனைத்து நாட்களிலும், 24 மணி நேரமும் செயல்படும் வகையில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களோ, அரசியல் கட்சியினரோ தேர்தல் தொடர்பான புகார்களை கட்டணமில்லா தொலைபேசி எண் “1800 599 4402” இல் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

புகார் அளித்தவரின் பெயர் வெளிப்படாமல் புகாரளித்திட ஏதுவாக இந்திய தேர்தல் ஆணையம் cVIGIL என்ற மொபைல் செயலியை நடைமுறைப்படுத்தியுள்ளது. இதன் வாயிலாக நடத்தை விதிமீறல், வாக்காளர்களை லஞ்சம் வழங்கி கவருதல் / அச்சுறுத்துதல் தொடர்பான புகார்களை மொபைல் போனில் நிகழ்நேரத்தில் புகைப்படம் / வீடியோ / ஆடியோவாக பதிவு செய்து புகாரளித்திடலாம்.
மேலும் மாவட்ட தேர்தல் தொடர்பு மையத்தை ”1950” என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்.

தேர்தல் தொடர்பான அனைத்து புகார்களுக்கும் உரிய நேரத்தில் தீர்வு காணவும் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்களை கண்டறியவும் 147 பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளிலும், 148 குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளிலும், பறக்கும் படையினரும் நிலைக் கண்காணிப்பு குழுவினரும் வாகனத் தணிக்கை மற்றும் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள மேற்கண்ட அனைத்து வசதிகளையும் தயக்கமின்றி பயன்படுத்தி சுதந்திரமான மற்றும் நியாயமான வகையில் சட்டமன்ற தேர்தலை நடத்திட முன்வருமாறு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டர் ந.மிருணாளினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்தல் நடத்தை விதி மீறல்கள் குறித்து புகார் தெரிவித்திட வடிவமைக்கப்பட்டுள்ள Cvigil மொபைல் செயலின் மூலம் இதுவரை 6 புகார்களும், 1950 என்ற எண்ணிற்கு இதுவரை ஐந்து புகார்களும், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் நடத்தை விதி மீறல்கள் குறித்து இதுவரை 12 புகார்களும், குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் நடத்தை விதி மீறல்கள் குறித்து இதுவரை 8 புகார்களும் என மொத்தம் 31 புகார்கள் இதுவரை வரப்பட்டுள்ளது.

இந்த அனைத்து புகார்களின் மீதும் உடனுக்குடன் உரிய விசாரணை நடத்தப்பட்டு, புகாரின் உண்மைத் தன்மை ஆராயப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!