Perambalur: Awareness short film competition on child marriage! Collector’s information!

பெரம்பலூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் பெண் குழந்தைகளை பாதுகாப்போம்! பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்! திட்டத்தின் மூலம் குழந்தை திருமணத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் குழந்தைக்களுக்கான உதவி எண் 1098 பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குறும்படப்போட்டி நடத்தப்படுகிறது. இந்த குறும்பட போட்டியில் பங்கேற்கும் பங்கேற்பாளர்கள் குறும்படங்கள் 7 நிமிடத்திற்கு மிகாமல் இருக்கவேண்டும். வயது வரம்பு கிடையாது.

இக்குறும்பட போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.15,000, இரண்டாம் பரிசு ரூ .10,000, மூன்றாம் பரிசு ரூ.5,000, பரிசு வழங்கப்படும். குறும்படங்கள் dswoprmblr2022@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு GOOGLE DRIVE LINK ஆக 03-03-2025 அன்றுக்குள் அனுப்பிட வேண்டும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு 04328-296209 என்ற மாவட்ட சமூக நல அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெற்று பங்கேற்கலாம் என கலெக்டர் கிரேஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!