Perambalur: Bhoomi Puja for AIADMK Campaign Stage!

பெரம்பலூர் அருகே உள்ள கவுல்பாளையம் கிராமத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வரும் ஏப்.6ம் தேதி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அதிமுக ஐஜேகே வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளார். அதற்கான பூமி பூஜை இன்று காலை நடந்தது.
பெரம்பலூர், குன்னம், அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய சட்டமன்ற தொகுதியின் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
பெரம்பலூர் அதிமுக மாவட்ட செயலாளரும், பெரம்பலூர் தனித் தொகுதியின் வேட்பாளருமான இளம்பை இரா தமிழ்ச்செல்வன், அரியலூர் மாவட்ட செயலாளரும் அரியலூர் தொகுதியின் வேட்பாளருமான தாமரை. எஸ். ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் இன்று பூமி பூஜை நடந்தது.
குன்னம் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் ஐ ஜே கே வேட்பாளர் சரண்யா, கட்சி நிர்வாகிகள் கூட்டணி நிகழ்ச்சி சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.