Perambalur: the Bhoomi Puja for the new Home section of Vasantham Real Estate
பெரம்பலூர் வசந்தம் ரியல் எஸ்டேட்டின், அபிராமபுரம் பகுதியில் புதிய அங்கீகாரம் பெற்ற வீட்டு மனைகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் அமைந்துள்ள அபிராமபுரம் பகுதியில் வசந்தம் ரியல் எஸ்டேட்டின் அரசால் அங்கீகரிப்பட்ட புதிய வீட்டுமனை பிரிவுகளுக்கான பூமி பூமி வசந்தம் ரியல் எஸ்டேட் நிர்வாக இயக்குனர் செந்தில்நதன் தலைமையில் நடைபெற்றது.
பின்னர், நிர்வாக இயக்குனர் செந்தில்நாதன் தெரிவித்ததாவது:
தற்போது பூமி பூஜை நடைபெற்று மனைப்பிரிவுகள் அரசால் அங்கீகரிப்பட்டதோடு மட்டுமல்லாமல், நகரின் முக்கியப் பகுதியாக உள்ளது.
அருகில் பேருந்து நிலையம், ஆட்சியர் அலுவலகம், நீதிமன்றம், எஸ்.பி அலுவலகம், பள்ளிகள் மற்றும், மருத்துவமனைகள், கோவில்கள், உணவகங்கள் இருப்பதோடு, குடியிருக்கும் வீடுகளும் அருகருகே உள்ளது.
பெரம்பலூர் நகருக்குள்ளும், வெளிப்பகுதிகளுக்கும் சென்று சாலை போக்குவரத்து வசதிகளும் ஒரு சேர அமையப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
மேலும், 25 அடி அகலத்தில் வீதிகள் அமைய உள்ளன. நிலத்தடி நீரும் குறைந்த ஆழத்திலேயே கிடைப்பது இந்த மனை பிரிவுகளின் சிறப்பம்சம் என தெரிவித்தார்.
இந்த பூமி பூஜை விழாவில் பொறியாளர்கள் செல்வக்குமார், பிரவீன், ராஜா, முத்துக்குமார், கலைச்செல்வன், மனோகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.