Perambalur: Bike crashes into barricade; one killed! Rural police investigating!
பெரம்பலூர் அருகே உள்ள மேலப்புலியூர் கிழக்குத் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி மகன் கோபாலகண்ணன் (44). இவர் நேற்றரவு சுமார் 10 மணி அளவில், மேலப்புலியூரில் இருந்து பூலாம்பாடி செல்வதற்கு பைக்கை பெரம்பலூர் – ஆத்தூர் சாலையில் ஓட்டிச் சென்றுக் கொண்டிருந்தார். பைக், எசனையில் உள்ள அன்னமங்கலம் 4 பிரிவு சாலை அருகே சென்ற போது, அங்கு வாகனங்களின் வேகத்தை குறைத்து விபத்தை தடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்து பேரிகார்டில் மோதியது. இதில் பைக்கிலிருந்து தூக்கி வீசப்பட்ட கோபாலகண்ணன் தலையில் அடிப்பட்டு, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் மிதந்து இறந்தார்.
இது குறித்த தகவலறிந்த பெரம்பலூர் ரூரல் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இறந்தவரின் சடத்தை மீட்டு, உடற்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப் பதிவு செய்த போலீசார் விபத்துக் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.