Perambalur: Bomb Threat to Court; Tension Prevails as Judges and Staff Are Evacuated!

பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மின்னஞ்சல் மூலம் வரப்பெற்ற தகவலையடுத்து, நீதிபதிகள் உள்ளிட்ட நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் வழக்காடுகள் உள்ளிட்ட அனைவரும் அவசர அவசரமாக நீதிமன்றத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, பெரம்பலூர் போலீசார் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மற்றும் துப்பறியும் நாய் உதவியுடன் நீதிமன்ற வளாகத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கடந்த மூன்று மாதங்களில் நான்காவது முறையாக, பெரம்பலூர் நீதிமன்றத்திற்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!