Perambalur borke the back door 35 sovereing of gold jewelry in the vicinity of the rear side of the house, 2 lakh in cash: Unidentified persons tampering Venture

perambalur-namaiur பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம், கீழப்புலியூர் அருகே உள்ள நமையூர் கிராமம் எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர்ஆசைத்தம்பி (வயது 42), தமிழரசி (30) தம்பதியினர்.

இவர்களுக்கு மாளவிகா(12),என்ற மகளும், ஸ்ரீதர்(8),என்ற மகனும் உள்ளனர்.

இதனிடையே கடந்த சில ஆண்டுகளாக ஆசைத்தம்பி சிங்கப்பூரில் தங்கி வேலை பார்த்து வருவதால், தமிழரசி தனது குழந்தைகளுடன் மாமியார் சரஸ்வதியுடன் (65) நமையூர் கிராமத்தில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று கீழப்புலியூர் கிராமத்திலுள்ள இந்தியன் வங்கியில்அடமானம் வைத்திருந்த 35 பவுன் தங்கநகையை மீட்டு எடுத்து வந்து வீட்டினுள் உள்ள ஒரு அறையில் பீரோ,சூட்கேஸ் மற்றும் பெட்டி ஆகிய மூன்று வெவ்வேறு இடங்களில் தனித் தனியாக மறைத்து வைத்து விட்டு குழந்தைகள் மற்றும் மாமியாருடன் வீட்டின் முன்பக்கமுள்ள போர்டிகோவில் நேற்று இரவு தூங்கியுள்ளனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை நாய் குறைக்கும் சத்தம் கேட்டு விழித்த தமிழரசி வீட்டினுள் சென்று பார்த்த போது, வீட்டின் பின்புறம் உள்ள மூன்று கதவுகளின் கொண்டி, பூட்டு மற்றும் தாழ்பாள் உடைக்கப்பட்டு அறையினுள் வைத்திருந்த 35 பவுன் தங்கநகை மற்றும் 2 லட்ச ரூபாய் ரொக்கம் திருடு போனது தெரிய வந்தது.

இதனால், அதிர்ச்சியடைந்த தமிழரசி நகை, பணம் திருட்டு போயவிட்டது என சத்தம் போட்டவரே மயங்கி விழுந்தார்.

தமிழரசின் கூச்சல் சத்தம் கேட்டு அவரது குடும்பத்தார் உள்ளிட்டஅக்கம் பக்கத்தினர் ஓடிவந்து சம்பவம் குறித்து கேட்டறிந்து மங்கல மேடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்த மங்களமேடு காவல் நிலையத்தினர் தகவலறிந்த மங்களமேடு போலீசார் டி.எஸ்.பி ஜவஹர்லால் இன்ஸ்பெக்டர் அன்புசெல்வன் (பொறுப்பு) எஸ்.ஜ வனிதா ஆகியோர் சம்பவ இடத்திற்கு, தடய அறிவியல் நிபுணர்கள் மற்றும் துப்பறியும் மோப்ப நாய் உதவியுடன் சென்று தடையங்களை சேகரித்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

வீட்டின் உரிமையாளர் முன்பகுதியில் தூங்கிகொண்டிருந்த போது மர்ம நபர்கள் சிலர் பின்பக்க கதவை உடைத்து, திறந்து நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற சம்பவம் அப்பகுதி பொது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!