Perambalur: Broken glass of bus that did not give way; Police raid for teenagers!
பெரம்பலூர் அருகே ஹார்ன் அடித்தும் வழிவிடாத அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்த வாலிபர்களை பாடாலூர் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பெரம்பலூரில் இருந்து இன்று மாலை அரசு டவுன் பஸ் ஒன்று செட்டிகுளம் நோக்கி 30 பயணிகளுடன் சென்றுக் கொண்டிருந்தது. செட்டிகுளம் மாதா கோவில் அருகே சென்ற போது பைக்கில் வந்த வாலிபர்களுக்கு அரசு பேருந்து வழிவிடாமல் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அரசு பஸ்சை நிறுத்துவதற்காக பைக்கில் வாலிபர்கள் சைகை காட்டினர். ஆனால், பஸ் அங்குள்ள மாதா கோவில் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கி விட்டனர். அப்போது பைக்கில் வந்த வாலிபர்கள் போதையில் ஆத்திரம் அடைந்து, பஸ் மீது கல்வீசி தாக்கினர். இதில் பஸ்சின் டிரைவரின் பக்கவாட்டில் உள்ள கண்ணாடி உடைந்தது. இதையடுத்து டிரைவர் பஸ்சை ஓரமாக நிறுத்தி விட்டு பாடாலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த பாடாலூர் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய வாலிபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், கிராம பகுதிகளுக்கு பஸ் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பெரும்பாலான அரசு பஸ் டிரைவர்கள், அதிகாரிகளின் ஜுப்பு டிரைவர்கள் முன் மற்றும் பின்வரும் வாகனங்களுக்கு உரிய சமிக்கை காட்டுவதில்லை, உரிய போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிப்பதில்லை. ரோடு அரசு அதிகாரிகளின் சம்பளத்தில் போட்டது போலவே நடந்து கொள்கின்றனர். இதனால் பொதுமக்கள் பலர் விபத்தில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அரசு வாகனங்களை இயக்கும் டிரைவர்களுக்கு, டிக்கட் எடுக்காமல் பஸ்சில் ஏற்பட்ட தகராறின் போது, போலீசார் அபராதம் விதித்ததை போல மீண்டும் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காத டிரைவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும், என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.