Perambalur burnt sugarcane cane farmers struggle

பெரம்பலூர் அருகே கரும்பிற்கான நிலுவைத்தொகையை வழங்க கோரி கரும்புகளை எரித்து ஆலையினுள் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

பெரம்பலூர் அருகே உள்ள அரசுக்கு சொந்தமான பொதுத்துறை சர்க்கரை ஆலை உள்ளது. கடந்த ஆண்டு இந்த ஆலைக்கு வெட்டப்பட்ட கரும்பிற்கான நிலுவைத்தொகை ரூ. 20 கோடியே 50 லட்ச ரூபாய் வழங்க கோரியும், கரும்பிற்கான ஆதார விலையான 2850 வழங்க கோரியும், ஆலையை தரமான உதிரி பாகங்களை பொருத்தி, ஆலையை இயக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியறுத்தி இன்று ஆலையினுள் 100க்கும் மேற்பட்ட விவாயிகள் ஒன்று திரண்டு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஏ.கே.இராஜேந்திரன் தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். ஆலை வளாகத்தினுள் கரும்புகளை எரித்தும் கதறி அழுதும் தங்கள் எதிர்பபை அரசுக்கு தெரிவிக்கும் விதமாக போராட்டம் நடத்தினர்.

முன்னதாக விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

பெரம்பலூர் சர்க்கரை கடந்த இரு நாட்காளக பாய்லரில் டியூப் வெடித்ததின் காரணமாக ஆலை இயங்காமல் உள்ளதால் ஆலைக்கு வெட்டி கரும்பு டிராக்டர்களில் ஏற்றிவ வந்த கரும்புகள் அருகில் உள்ள சர்க்கரை ஆலைகளுக்கு திருப்பி அனுப்பபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!