International businessman frees 179 Tamils from Malaysia by plane

பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடியை பூர்வீகமாக கொண்டவர் தொழிலதிபர் டத்தோ பிரகதீஸ்குமார் (DATO. S. PRAKADEESH KUMAR MD., PLUS MAX Group of Companies), மலேசியாவில் தொழிலதிபராக உள்ளார். இவர், மலேசியாவில் இருந்து தமிழகத்திற்கு வந்த சொந்த நாடான திரும்ப முடியாமல் தவித்த 179 மலேசிய தமிழர்களை தனிவிமானம் மூலம் மலேசியா அனுப்பி வைத்த நிகழ்ச்சி பொதுமக்களிடையே பெரும் பாராட்டை பெற்றுள்ளது.

உலகம் முழுக்க கேட்டாலே அதிரப்படும் சொல் கொரோனா. வல்லரசுகள் முதல் குட்டி தீவு நாடுகள் வரை கொரோனா வைரஸால் உயிர் பயத்தில் ஒவ்வொரு நாளையும் கடக்க தொடங்கியுள்ளன. வெளிநாட்டில் உள்ள அவரவர் நாட்டுமக்களை அந்நாட்டு அரசாங்கங்கள் சிறப்பு விமானம் ஏற்பாடு செய்து அழைத்துக் கொண்டுள்ளது. அதன்பிறகு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் விமான சேவைகளை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மலேசியாவில் இருந்து தமிழகத்திற்கு வந்திருந்த 179 மலேசிய தமிழர்கள் செய்வதறியாது தத்தளித்தனர். அவர்கள் மலேசிய நாட்டிற்கு செல்ல வழியின்றி 14 நாட்கள் முடங்கி தமிழ்நாட்டிலேயே கிடந்தனர்.

இது குறித்த தகவல் அறிந்த பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடியை பூர்வீகமாக கொண்ட மலேசிய தொழிலதிபர் டத்தோ.பிரகதீஸ் குமார், மலேசியா திரும்ப முடியாமல் நிற்கதியாய் தவிக்கும் மலேசிய தமிழர்களை எப்படியாவது மலேசியா அனுப்பிட திட்டமிட்டார். அதன்படி தமிழகத்தில் பரிதவிக்கும் மலேசிய தமிழர்களின் விபரங்களை சேகரித்து முதற்கட்டமாக 179 பேரை மலேசியாவிற்கு அழைத்துசெல்வது என முடிவெடுத்தார்.

அதைத்தொடர்ந்து அவரது ப்ளஸ் மேக்ஸ் குருப் நிறுவனத்தின் மூலம் 40 லட்ச ரூபாய் செலவில் தனிவிமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதனிடையே இந்தியா மற்றும் மலேசியா என இருநாட்டு அரசாங்கங்களிடம் பேசிய டத்தோ பிரகதீஷ் குமார்,விபரங்களை எடுத்துக் கூறினார். அவரின் நல்லெண்ண முயற்சிக்கு இருநாட்டு அரசுகளும் சம்மதிக்க, மலேசிய தமிழர்களை மலேசியா அழைத்துச் செல்வதற்கான முயற்சிகள் வேகமாக நடைபெற்றது.

டத்தோ பிரகதீஷ் குமார் அவர்களின் சொந்த செலவில் தனிவிமானம் திருச்சி விமான நிலையத்தில் தயாராய் இருந்து. இதுபற்றிய தகவல் தமிழகத்தில் இருந்த 179 மலேசிய தமிழர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உற்ற நேரத்தில் உதவிய டத்தோ பிரகதீஷ் குமாருக்கு நன்றி தெரிவித்தபடியே திருச்சி விமான நிலையம் வந்தடைந்தனர். அங்கு தயாராய் இருந்த தனிவிமானம் 179 மலேசிய தமிழர்களையும் ஏற்றிக் கொண்ட விமானம் மலேசியா நோக்கி புறப்பட்டது.

உலகமே கொரோனா பிடியில் சிக்கிகொண்டு விழிபிதிங்கி கொண்டிருக்கும் சமயத்தில் தமிழகத்தில் தவித்த மலேசிய தமிழர்களை மீட்பதற்கு டத்தோ பிரகதீஷ் குமார் எடுத்த முயற்சியை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அரசாங்கம் எடுக்க வேண்டிய பெருமுயற்சியை தனிஒருவனாய் எடுத்து மலேசிய தமிழர்களை மீட்டுச்சென்ற டத்தோ பிரகதீஷ் குமாரின் செயல் பெரும் பாராட்டை பெற்றுள்ளது.”தமிழன் என்றோர் இனமுண்டு! தனியே அவருக்கொரு குணமுண்டு! என்று நாமக்கல் கவிஞன் பாடியது டத்தோ பிரகதீஷ் குமார் போன்றோரை மனதில் வைத்துதான் என்று நினைக்க தோன்றுகிறது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!