Perambalur: Businessman Veritas founder Arulmani donated Rs. 2.15 crore to the government school he studied at and renovated it to make it modern!

பெரம்பலூர் அருகே உள்ள லாடபுரம் கிராமத்தை சேர்ந்தவர் டி. அருள்மணி, அந்த கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 8ம் வகுப்பு வரை பயின்ற அவர் குஜராத்தில் எம்.பி.ஏ படித்து முடித்தார். பின்னர், வெரிட்டாஸ் (VERITAS) என்ற நிதி நிறுவனத்தை தொடங்கி, இந்தியாவில், 10 மாநிலங்களிலும், ஒரு யூனியன் பிரதேசம் உள்பட 432 கிளைகளுடன் செயல்பட்டு, சுமார் 2லட்சத்து 3 ஆயிரம் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. சுமார் 7 ஆயிரம் கோடி வணிகம் செய்யும் இந்நிறுவனம் சி.எஸ்.ஆர். நிதியில் இருந்து ரூ. 2 கோடியே 15 லட்சம் மதிப்பில் லாடபுரம் அரசு மேல்நிலை பள்ளிக்கு வெரிட்டாஸ் பவுண்டேசன் சார்பில் நிறுவனர் அருள்மணி வழங்க முன்வந்து, அதில், பள்ளியின் முழுகட்டமைப்பு மற்றும் வளாகத்தில் இருக்கும், கட்டிடங்களின் கட்டமைப்பு வலுப்படுத்துதல், சுவர்களுக்கு புதிதாக வண்ணம் பூசுதல், சுற்றுச்சுரை வலுவாக்க புதுப்பித்தல், பள்ளியில் ஆட்டோமேட்டிக் சிஸ்டத்துடன் வெஸ்டர்ன் டாய்லட், சானிட்டரி நாப்கின்களை அப்புறப்டுத்தும் வகையில் எரியூட்டிகள் கொண்ட கழிப்பறைகள் பள்ளி உபகரணங்களை வழங்கியயோடு ஓராண்டிற்கு பராமரிப்பு பணியை இந்நிறுவனம் ஏற்றுக் கொண்டது.

இந்த வசதிகள் நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி வழிக்காட்டுதலின் படி புதுப்பிக்கபட்டு, அந்ந தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் மிளிர்கின்றன. அதனை எம்.எல்.ஏ பிரபாகரன் முன்னிலையில் கலெக்டர் கிரேஸ் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: தமிழ்நாட்டில் உள்ளது போல தனது சொந்த மாநிலமான மிஷோருமில் கூட இல்லை. இந்த மாடர்ன் பள்ளி மாணவர்கள் சிறப்பாக பயின்று அருள்மணி போல உயர்நிலைக்கு வந்து அனைவருக்கும் உதவும் வகையில் வளரவேண்டும் என பேசினார். சிறப்பு விருந்தினர்களாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியும், வெரிட்டாஸ் பவுண்டேசன் தலைவருமான டி.எஸ்.ஸ்ரீதர், வெரிட்டாஸ் நிறுவனர் டி. அருள்மணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

வெரிட்டாஸ் நிறுவனர் டி. அருள்மணி பேசியதாவது: “வெரிட்டாஸ் சமூகத்திற்கு சேவை செய்வதில் மிகவும் உறுதியாக உள்ளது. மேலும் இந்த சி.எஸ்.ஆர் முயற்சியால், லாடபுரத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்காக உயர்த்தர உள்கட்டமைப்பு, உயர்த்தர சுகாதாரம் மற்றும் கற்றல் உதவிகளை மேம்படுத்த உதவும் என்றும், மேலும், உள்கட்டமைப்பு மேம்பாடுகளில் இத்தகைய முதலீடுகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் என அனைவருக்கும் கற்றலுக்கு உகந்த சூழலை உருவாக்கும் என்றும், மாணவர்களின் கற்றல் அளவில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் நாங்கள் நம்புகிறோம். என பேசினார்.

கல்வித்துறை அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள், ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் மாயக்கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் திரளாக கலந்து கொண்டனர். வெரிட்டாஸ் நிறுவனர் அருள்மணி தான் படித்த அரசு பள்ளிக்கு தனது நிறுவனம் மூலம் உதவியதற்கு அப்பகுதி மக்கள் பாராட்டி நன்றிகளை தெரிவித்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!