Perambalur: Can voters aged over 85 and persons with disabilities visit the polling station to cast their votes? The process of seeking their preference has begun.

தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் 85 வயதிற்கு மேற்பட்ட முதிவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்க இயலுமா என அவர்களின் விருப்பத்தை கேட்க வேண்டும் என்றும், வாக்குச்சாவடிக்கு நேரில் வந்து வாக்களிக்க இயலாத நிலையில் உள்ளவர்களுக்கு படிவம் 12 D வழங்கி அவர்களின் வீட்டிற்கே அலுவலர்கள் நேரில் சென்று அவர்களின் வாக்குகளை பதிவுசெய்ய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

147-பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 85 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுதுதிறனாளிகள் கணக்கெடுப்பின் படி., வேப்பந்தட்டை வட்டத்தில் 675 முதியவர்களும், 1,700 மாற்றுதுதினாளிகளும் உள்ளனர். பெரம்பலூர் வட்டத்தில் 691 முதியவர்களும், 1,229 மாற்றுத்திறனாளிகளும், ஆலத்தூர் வட்டத்தில் 289 முதியவர்களும், 511 மாற்றுத்திறனாளிகளும் உள்ளனர். ஆக மொத்தம் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் 1,625 முதியவர்களும், 3,440 மாற்றுத்திறனாளிகளும் உள்ளனர்.

148.குன்னம் சட்டமன்ற தொகுதியில் 85 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுதுதிறனாளிகள் கணக்கெடுப்பின் படி., குன்னம் வட்டத்தில் 1,093 முதியவர்களும், 1,914 மாற்றுத்திறனாளிகளும் உள்ளனர். ஆலத்தூர் வட்டத்தில் 428 முதியவர்களும், 781 மாற்றுத்திறனாளிகளும், செந்துறை வட்டத்தில் 644 முதியவர்களும், 1,570 மாற்றுத்திறனாளிகளும் உள்ளனர். ஆகமொத்தம் குன்னம் சட்டமன்ற தொகுதிகயில், 2,165 முதியவர்களும், 4,265 மாற்றுத்திறனாளிகளும் உள்ளனர்.

இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 3,781 முதியவர்களையும், 7,705 மாற்றுத் திறனாளிகளையும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நேரில் சென்று பார்த்து அவர்களிடம், வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடிக்கு நேரில் வந்து வாக்களிக்க இயலுமா என கடந்த 11.03.2026 முதல் கேட்டறிந்து வருகின்றனர். வாக்குச்சாவடிக்கு நேரில் வர இயலாத நிலையில் உள்ளவர்களிடம் ஒப்புதல் பெறப்பட்டு வருகின்றது. அதனைத்தொடர்ந்து, படிவம் 12 D வழங்கி, வீட்டிலேயே அவர்கள் வாக்களிக்க தேவையான முன்னேற்பாட்டு பணிகள் நடைபெறும். நாளது தேதி வரை 993 வாக்காளர்கள் வீட்டிலிருந்து வாக்களிக்க விருப்பம் தெரிவித்து படிவம் 12D அளித்துள்ளனர் வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக தேர்தல் ஆணையத்தால் இந்த நடவடிக்கையை எடுத்து வருகிறது என தெரிவிக்கப்பபட்டுள்ளது.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!