Perambalur: Car-bike collision; One person is killed! Police investigation!
பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு அருகே கார் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற முதியவர் இன்று உயிரிழந்தார்.
பெரம்பலூர் அருகேயுள்ள ரஞ்சன்குடி கிராமம் அஞ்சலகத் தெருவை சேர்ந்தவர் வெங்கடாஜலம் (79). இவர், இன்று காலை தொழுதூரில் இருந்து ரஞ்சன்குடிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார்.
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மங்கலமேடு பிரிவு சாலையை கடக்க முயன்றபோது, பாண்டிச்சேரியிலிருந்து துறையூர் நோக்கி சென்ற கார் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாரத விதமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த வெங்கடாஜலம், பெரம்பலூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.