Perambalur: Car-bike collision; Teenager killed!
பெரம்பலூர் மாவட்டம், கல்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட எறையூர் கிராமத்தைச் சேர்ந்த மணிசங்கு மகன் மணிகண்டன்(29). நேற்று மாலை, திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை கிழக்கு பக்கம் பாடாலூரில் இருந்து பெரம்பலூரை நோக்கி மணிகண்டன் எதிர் திசையில், பைக்கில் சென்றுக் கொண்டிருந்தார். பைக் தனியார் மண்டபம் அருகே சென்றபோது எதிரே சென்னையில் இருந்து திருச்செந்தூரை நோக்கி கார் பைக் மீது மோதியது. இதில், பைக்கில் வந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு சென்ற பாடாலூர் போலீசார். மணிகண்டன் உடலை கைப்பற்றி, உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். பின்னர். காரை ஓட்டி வந்த சென்னையை சேர்ந்த சீனிவாச நாடார் மகன் சரவணன் (55) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று தீபாவளி நாளில் மணிகண்டன் இறந்த சம்பவம் க.எறையூர் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதே போல ஆலத்தூர் பிரிவு சாலை அருகே எதிர்திசையிலும், பெரம்பலூரில் இருந்து கலெக்டர் ஆபீஸ் பிரிவு சாலையில் இருந்து சிறுவாச்சூர் தனலட்சுமிசீனிவாசன் மருத்துவக் கல்லூரி வரையிலும், மறுபுறம் எதிர் திசையில் ராமக்கிருஷ்ணா கல்வி நிறுவனங்களில் இருந்து கல்பாடி பிரிவு சாலை வரைக்கும் பைக்கில் அதிகஅளவில் எதிர்திசையில் வரும் வாகன ஓட்டிகளை போலீசார் கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்னர்.