Perambalur: Car plunges into a well; rescue operations underway with great intensity for over 2 hours!

பெரம்பலூர் அருகே கார் கிணற்றுக்குள் பாய்ந்து விபத்திற்குள்ளான சம்பவத்தில் ஒருவர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
பெரம்பலூர் அருகே உள்ள தனியார் உணவு மற்றும் திண்பண்டங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டு அலுவலராக பணியாற்றி வந்தவர் திருச்சி வயலூரை சேர்ந்த சத்திசீலன் மகன் குணா (40). இவர் இன்று மதியம் தனது பணியை முடித்து விட்டு காரில் திருச்சியில் உள்ள வீட்டிற்கு சென்றுள்ளார். கார் சென்னை -திருச்சி நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருக்கும் போது பாடாலூர் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் இருந்து மகேந்திரன் என்பவரது வயலில் இருந்த கிணற்றுக்குள் பாய்ந்தது. இது குறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார், தீயணைப்பு மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து கடந்த 2 மணி நேரமாக கிரேன் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மீட்பு பணிகள் நிறைவடைந்த பின்னரே, காரில் எத்தனை பேர்கள் சென்றனர், அவர்கள் உயிருடன் உள்ளனரா இல்லையா என்பது தெரியவரும். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.









kaalaimalar2@gmail.com |
9003770497