Perambalur: Certificates of appreciation for 10 panchayats without tuberculosis; Provided by the Collector!

Perambalur: Certificates of appreciation for 10 panchayats without tuberculosis; Provided by the Collector!

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், காச நோய் தினத்தை முன்னிட்டு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பில் காசநோயாளிகள் இல்லாத 10 ஊராட்சிகளை பாராட்டி “காசநோய் இல்லா பஞ்சாயத்து” என்ற பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் கிரேஸ் பச்சாவ் வழங்கினார்.

பொதுமக்களிடையே காசநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் மார்ச் 24-ஆம் தேதி அன்று உலக காசநோய் நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனால் காச நோயிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் லவகையிலும், இது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் பள்ளி, கல்லூரி மாணவ,மாணவிகளுக்கு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கும், சிறப்பாக செயல்பட்ட மருத்துவர்களுக்கும் கலெக்டர் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

மேலும், ஒவ்வோர் ஆண்டும் காச நோயாளிகள் இல்லாத 10 ஊராட்சிகளை தேர்வு செய்து அந்த ஊராட்சிக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகின்றது. அதனடிப்படையில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கீழக்கரை, கோனேரிபாளையம், தழுதாழை, தொண்டப்பாடி, கண்ணப்பாடி, பிலிமிசை, அய்யனாபுரம், புஜங்கராயநல்லூர், ஒதியம், வரகூர் ஆகிய 10 ஊராட்சிகளுக்கும் பாராட்டுச்சான்றிதழை கலெக்டர் வழங்கினார். காசநோயாளிகளை கண்டறிந்து அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்த 15 தனியார் மருத்துமனைகள் மற்றும் ஆய்வகங்களை பாராட்டியும், மாவட்டத்தில் உள்ள அணைத்து காச நோய் ஒழிப்பு பணி பங்குதாரர்கள் அனைவரையும், பாராட்டி மாவட்ட கலெக்டரால் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பொதுசுகாதாரப்பணிகளுக்கான இணை இயக்குநர் மாரிமுத்து, துணை இயக்குநர் (காசநோய்) ரா.நெடுஞ்செழியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!