Perambalur: Change in power distribution due to renovation of Kadoor, Pilmisai, Koothur; Tamil Nadu Electricity Board announcement!
தமிழ் நாடு மின்சார வாரியத்தில், பெரம்பலூர் மாவட்டம், கொளக்காநத்தம் பிரிவுக்கு உட்பட்ட பிலிமிசை, பி.கூத்தூர் ஆகிய இரண்டு மின் பகிர்மானங்களும், 21.02.2025 முதல் மருதையான்கோவில் பிரிவுக்கு மின்வட்ட சீரமைப்பின் காரணமாக மாற்றப்பட்டுள்ளன. ஆகவே, பிலிமிசை. பி.கூத்தூர் பகிர்மானத்தில் உள்ள மின் நுகர்வோர்கள் மின்சாரத்துறை சேவைகளுக்கு மருதையான் கோவில் பிரிவினை அணுகுமாறும்,
மருதையான்கோவில் பிரிவுக்கு உட்பட்ட காடூர் பகிர்மானம். 25.02.2025 நாள் முதல் துங்கபுரம் பிரிவுக்கு மின்வட்ட சீரமைப்பின் காரணமாக மாற்றப்பட்டுள்ளது. ஆகவே. காடூர் பகிர்மானத்தில் உள்ள மின் நுகர்வோர்கள் மின்சாரத்துறை சேவைகளுக்கு துங்கபுரம் கேட்டுக்கொள்ளப்படுகிறது, என பெரம்பலூர் மின்வாரிய இயக்கலும், காத்தலும் செயற்பொறியாளர் விடுத்துள்ள அறிவிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.