Perambalur: Chennai High Court orders Collector to remove encroachments around Valikandapuram Sub-Registrar’s office!

பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரம் கிராமத்தில் சார் பதிவாளர் அலுவலகம், கடந்த 1927 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இந்த சார்பதிவாளர் அலுவலகத்திற்கு முன்புறம் அரசு புறம்போக்கு இடமும் தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடமும் கிராம புல எண் 309 / 4A, மற்றும் 4B-ல் உள்ளது.

இந்த சார்பதிவாளர் அலுவலகத்திற்கு முன்பகுதியில் உள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான இடத்தில் அங்கு ஆவண எழுத்தர் ஆக இருப்பவர்களும், முத்திரைத்தாள் விற்பனையாளர்களான, கவிதா, ரவிச்சந்திரன், ரெங்கராஜ், பெத்துசாமி, நூர்முஹமது, சின்னசாமி, பாலமுருகன், ராமராஜ், கவிதா, பாத்திமா, ரவிச்சந்திரன், தேவன், கிருஷ்ணசாமி ஆகியோர் அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டிடம் கட்டி சொந்த அலுவலகமாக பயன்படுத்தி வருவதோடு, கார். பைக் உள்ளிட்ட வாகனங்களையும் நிறுத்தி இடையூறு செய்து வருவதாகவும், இதனால், சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வரும் பொது மக்களும், அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகளும், அரசு திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்திற்கு செல்லும் மாணவ மாணவிகளும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இது குறித்து, ஊர் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், கலெக்டர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கும், ஆக்கிரமிப்புகளை அமைப்புகளை அகற்ற பலமுறை முறையிட்டும், மனு கொடுத்தும் எந்தவொரு நடவடிக்கையும் இல்லாத காரணத்தால், வழக்கறிஞர் வி.ஜி. ஞானபிரகாஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டி ஒரு பொது நல வழக்கு ஒன்று தாக்கல் செய்தார். அந்த வழக்கினை விசாரித்த நீதிபதி, 8 வார காலத்திற்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற பெரம்பலூர் கலெக்டர், பெரம்பலூர் ஆர்.டி.ஓ, வேப்பந்தட்டை தாசில்தார், வேப்பந்தட்டை பிடிஓ ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!