Perambalur: Chettikulam Temple Bill Counting; Devotees pay Rs. Devotees have donated gold and silver worth Rs. 6.18 lakhs!
பெரம்பலூர் மாவட்டம், செட்டிகுளத்தில் புகழ் பெற்ற ஏகாம்பரேஸ்வரர் மற்றும் தண்டாயுதபாணி சாமி கோயில்கள் உள்ளன. இக்கோயில்களில் உள்ள உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணி, மலை மீதுள்ள தண்டாயுதபாணி கோயில் வளாகத்தில் அறநிலைத் துறை பெரம்பலூர் உதவி ஆணையர் உமா தலைமையில் நடந்தது,
செட்டிகுளம் தண்டாயுதபாணி சாமி கோயில் செயல் அலுவலர் ஹேமாவதி, அறநிலையத்துறை ஆய்வாளர் சுமதி ஆகியோர் முன்னிலையில் உண்டியல் காணிக்கைகள் எண்ணப்பட்டது. கோயில் பணியாளர்கள், ஐயப்ப சேவா சங்கத்தினர், தன்னார்வலர்கள் 35 பேர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். கடந்த 3 மாதங்களில் உண்டியலில் பக்தர்கள் ரூ.6லட்சத்து 18 ஆயிரத்து 863 காணிக்கையாக செலுத்தியிருந்தனர். மேலும், உண்டியலில் 5 கிராம் தங்கம், 273 கிராம் வெள்ளி ஆகியவையும் இருந்தது. இந்த தொகை அனைத்தும் கோயில் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.