Perambalur: Chief Minister M.K. Stalin’s birthday celebration seminar!
பெரம்பலூர் மாவட்ட இளைஞர் அணி சார்பில், திமுக தலைவரும், முதலமைச்சருமான, மு.க. ஸ்டாலின் 72- ஆவது பிறந்தநாள் விழா கருத்தரங்கம் நடைபெறுகிறது. இந்த கருத்தரங்கில் திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை தலைவர்
சுப.வீரபாண்டியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இது குறித்து பெரம்பலூர் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா.எம்.பி., உத்தரவிற்கிணங்க, போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆலோசனைக்கினங்க, திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்ட இளைஞர் அணி சார்பில், 05.04.2025 (சனிக்கிழமை), காலை 10.00 மணியளவில்
பெரம்பலூர், எளம்பலூர் சாலையில் உள்ள கர்ணம் சுப்ரமணியம் சகுந்தலா திருமண மண்டபத்தில்
கருத்தரங்கம் நடைபெறுகிறது.
மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஆதவன் (எ) ஹரிபாஸ்கர் தலைமையில், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் அ.அப்துல்கரீம் வரவேற்புரையில், மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், கே.என்.அருண்நேரு., எம்.பி., சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் தங்க.சித்தார்த், குன்னம் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் ஏ.கே.அருண், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் டி.ஆர்.சிவசங்கர், வ.சுப்ரமணியன், மா.பிரபாகரன், ஆகியோர் முன்னிலையில் நடைபெறும் கருத்தரங்கை போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைக்கிறார்.
இந்த கருத்தரங்கில் திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் கலந்து கொண்டு சிறப்பு உரையாற்றுகிறார். இதில் திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சிற்பி.செல்வராஜ் கொள்கையின் தொடர்ச்சி எனும் தலைப்பிலும், திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் மதிவதனி நவீனத்துவத்தின் மலர்ச்சி எனும் தலைப்பிலும், தி.மு.க.தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் எஸ்.பத்மபிரியா திட்டங்களின் வளர்ச்சி எனும் தலைப்பிலும் உரையாற்றுகின்றனர். மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் இரா.அருண் நன்றி உரையாற்றுகிறார்.
இதில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், வார்டு, கிளைக் கழக செயலாளர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டுமென அதில் இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார்.