Perambalur city VCK secretary suspended!
விசிக தலைவர் தொல்.திருமாவளவன், ஒழுங்கு நடவடிக்கைக்குழு மாநிலச் செயலாளர் ஞான.தேவராசு ஆகியோர் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:
பெரம்பலூர் விசிக நகர செயலாளர் தங்க.சண்முகசுந்தரம் கடந்த 15.09.2022 அன்று மண்டலச் செயலாளர் பெரம்பலூர் இரா.கிட்டு வீட்டிற்கு, அத்துமீறி நுழைந்து குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் அவரை பேசியதோடு, கைகளால் தாக்கியாக வரப்பட்ட புகாரை விசாரிக்கப்பட்டது. தங்க.சண்முகசுந்தரம் அவர்கள் கட்சியின் விதிகளுக்கு எதிராகவும், கட்டுப்பாட்டை மீறியும் செயல்பட்டிருக்கிறார் என்பது உறுதிப்படுகிறது. எனவே, அவர், 3 மாதக் காலம் இடைநீக்கம் செய்யப்படுகிறார், என்றும், அவர், இது குறித்து தலைமையிடத்தில் மேல்முறையீடு செய்ய பதினைந்து நாட்களுக்கு பின்னர் அனுமதிக்கப்படுகிறது. என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளம்பரம்: