Perambalur: Clerk suspended for misconduct! Demand to replace clerks who have been working in the same town for many years!
பெரம்பலூர் மாவட்டம் , ஆலத்தூர் யூனியனுக்கு உட்பட்ட நொச்சிக்குளம் ஊராட்சி செயலர் இருந்தவர் பானுமதி. ஊராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களில் பானுமதி பஞ்சாயத்து பணத்தை முறைகேடு செய்துள்ளதாக இன்று நடந்த கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். கலெக்டர் கிரேஸ் உத்தரவின் பேரில் ஆலத்தூர் பி.டி.ஓ சேகர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருந்த பதிவேடுகளை கைப்பற்றி ஆய்வு செய்தார். அப்போது பானுமதி ரூ. 78 ஆயிரத்தை முறைகேடாக கையாடல் செய்தது உறுதியானது. இதுகுறித்து பி.டி.ஓ கலெக்டருக்கு அறிக்கை அளித்தார். கலெக்டர் உத்தரவின் பேரில், ஆலத்தூர் பி.டி.ஓ. ஊராட்சி செயலர் பானுமதியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். கிராம சபைக்கூட்டத்தில் பொதுமக்களின் தெரிவித்த பேரில் ஊராட்சி செயலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நீண்ட நெடுங்காலமாக ஒரே ஊரில் பணிபுரிந்து வரும் அனைத்து ஊராட்சி செயலர்களையும் வெவ்வேறு ஊர்களுக்கு மாற்றம் செய்ய வேண்டும் அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது, ஊராட்சித் தலைவர்களும் இல்லாததால், செயலர்கள் காட்டில் தற்போது நல்ல மழை பெய்து வருகிறது. இதற்கு அதிகாரிகளும் பலர் உடந்தையாக உள்ளனர்.