Perambalur Co-optex Deepavali special sales starting at Rs 40 lakh

பெரம்பலூர் கோ-ஆப்டெக்ஸில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மென்பட்டு சேலைகள், காஞ்சிபுரம் பட்டு சேலைகள், ஆரணி ( Temple Border) பட்டு சேலைகள், தஞ்சாவூர் பட்டு சேலைகள், சேலம் பட்டு சேலைகள்,;

திருபுவனம் பட்டு சேலைகள், கோவை கோரா காட்டன் சேலைகள், சுங்கடி சேலைகள், செட்டிநாடு சேலைகள், காஞ்சிகாட்டன் சேலைகள், கூறைநாடு புடவைகள், நெகமம் காட்டன் சேலைகள், எல்லோருக்கும் பட்டு சேலைகள், கொரா காட்டன் சேலைகள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான் பருத்தி சேலைகள்,

லினன் ரெடிமேட் சட்டைகள், ஜீன்ஸ் டாப்ஸ், மீரட் போர்வைகள், சுடிதார் மெட்டீரியல்ஸ், சிறுமுகை, அருப்புக்கோட்டை, பரமக்குடி, மணமெடு, வனவாசி, சேலம் பருத்தி சேலைகள், அச்சிட்ட பருத்தி சேலைகள் ஜமுக்காளம், போர்வைகள், தலையணை உறைகள், திரைச்சீலைகள், துண்டு இரகங்கள், ரெடிமெட் சட்டைகள், கால் மிதியடிகள், நைட்டிஸ் மற்றும் மாப்பிள்ளை செட் என ஏராளமாக வரவழைக்கப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

இன்று காலை பெரம்பலூர் கடைவீதி பகுதியில் உள்ள கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா,குத்து விளக்கு ஏற்றி முதல் விற்பனையை துவக்கி வைத்து, அங்கு தீபாவளி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சேலைகள் மற்றும் துணி வகைகளை பார்வையிட்டார்.

தஞ்சாவூர் மண்டலத்தில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக கடந்த (2016-17) ஆண்டு ரூ.11.11 கோடி மதிப்பில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு (2017-18) ரூ.14.90 கோடி விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர; கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தின் மூலமாக கடந்த தீபாவளி பண்டிகையின் விற்பனைத் திட்டத்தின் கீழ் மட்டும் ரூ.31.01 லட்சம் விற்பணை செய்யப்பட்டது. தற்போது ரூ.40.00 இலட்சங்கள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸில் வாங்கும் ஆடைகளுக்கு தமிழக அரசு 30 சதவீத சிறப்பு தள்ளுபடி வழங்குகிறது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுத்துறை ஊழியர்கள், உள்ளாட்சித் துறை பணியாளர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் ஆகியோருக்கு கோ-ஆப்டெக்ஸ் வட்டியில்லா சுலப கடன் வசதி அளிக்கிறது. இந்த அரிய வாய்ப்பினை அனைத்து அரசு அலுவலர்களும் பயன்படுத்தி கொள்ளலாம் என கோ ஆப் டெக்ஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் இரா.சுரேஷ்குமார், வட்டாட்சியர் பாலகிருஷ்ணன், துணை மண்டல மேலாளர் (தணிக்கை) எம்.அன்பழகன், விற்பனை நிலைய மேலாளர் ஏ.சங்கர் உள்ளிட்ட ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!