Perambalur: Collector allocates one space for 3 departments; Officials are in pain! Will this happen?
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மார்க்கட் அருகில் பூமாலை வணிக வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில், காலியாக கிடக்கும் இடத்தை தங்களுக்கு ஒதுக்கித்தர அதிகாரிகள் கலெக்டர் கிரேஸிடம் கோரிக்கையை ஃபைல்களாக வைத்தனர். ஆனால், கலெக்டர் கிரேஸ் இதை எந்த விவரமும் அறியாமல், பூமாலை வணிக வளாகத்தில் உள்ள இடத்தை 3 துறைகளுக்கு அடுத்தடுத்து ஒரே இடத்தை ஒதுக்கி கையெழுத்திட்டுள்ளார். அதிகாரிகள் அந்த வளாகத்திற்கு சென்று பார்த்த போது 3 துறையினரும் வந்த நின்ற போதுதான் அவர்களுக்கு விசயம் அப்போதுதான் புரிந்தது. கலெக்டர் எந்த விவரத்தையும் கேட்டுக் கொள்ளாமல், இடம் இருப்பது எங்கென்றும் தெரியாமலேயே ஒதுக்கி உள்ளார். இவர் இப்படி மாவட்டத்தை நிர்வாகம் செய்தால் எப்படி என அதிகாரிகள் குமறிக் கொண்டுள்ளனர்.
ஒரு மாவட்டத்தில் கலெக்டர், எஸ்.பி -யாக பணிபுரிபவர்கள், எந்த மாநிலத்தில் பணிபுரிகிறார்களோ, அந்த மாநிலத்தின் மொழியை எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். ஆனால், தற்போது பெரம்பலூர் கலெக்டராக இருக்கும் கிரேஸ் பொதுவெளியில் எழுதி படிக்க காண்பிக்க வேண்டும், என்றும் இவரை தேர்வு செய்ததில் சந்தேகம் இருப்பதாக பொதுமக்கள் கருதுகின்றனர். மேலும், அரசு கலெக்டருக்கு வழங்கிய செல்போன் 9444175000 என்ற எண்ணிற்கு பொதுமக்கள் குறைகளை தெரிவிக்கவோ, அல்லது வேறு மாவட்டம் தொடர்பான விசயங்களுக்கு அழைத்தால், போனை எடுப்பதே இல்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.