Perambalur Collector examined the changes in the Internet Patta in Alathur Taluck office
பெரம்பலூர் வட்டத்தில் பட்டா மாற்றம், சிட்டா மாற்றம் மற்றும் கூட்டு பட்டாவிலிருந்து தனிப்பட்டா மாற்றம் மற்றும் பட்டா உட்பிரிவு மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்ககைகளை பொதுமக்கள் இ-சேவை மையங்கள் மூலம் அளித்து, அதற்கான தீர்வுகளை பெற்று வருகின்னறனர்.
அதன்படி ஆலத்தூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் இணையதளம் மூலம் மேற்கொள்ளப்படும் பட்டா மாறுதல்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா இன்று ஆய்வு மேற்க்கொண்டார்.
பட்டா மாற்றம், சிட்டா மாற்றம் மற்றும் கூட்டு பட்டாவிலிருந்து தனிப்பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்ககைகள் குறித்து அளிக்கப்படும் கோரிக்கை மனுக்கள் மீது வருவாய் வட்டாட்சியர் மூலம் தகுதியான நபர்களுக்கு பட்டா மாற்றம், சிட்டா மாற்றம் மற்றும் கூட்டு பட்டாவிலிருந்து தனிப்பட்டா மாற்றம் செய்யப்பட்டு உரியவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகின்றது.
மேலும் பொதுமக்களால் அளிக்கப்படும் தகுதியில்லாத மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, அதற்கான காரணங்கள் குறித்து சம்மந்தப்பட்ட மக்களுக்கு தகவலும் தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறாக தள்ளுபடி செய்யப்படும் மனுக்களுக்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காகவும், அம்மனுக்களின் மீது மேற்க்கொள்ளப்பட வேண்டிய மீள் நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா ஆலத்தூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேரடியாகச்சென்று ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், பல்வேறு கோரிக்கைகள் அளிக்க வட்டாட்சியர் அலுவலகம் வரும் பொதுமக்களின் கோரிக்கைகளை கணிவுடன் பரிசீலித்து அம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் வருவாயத்துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
மேலும், வட்டாட்சியர் அலுவகம் வருகை தரும் பொதுமக்களின் அடிப்படைத் தேவையான குடிநீர், கழிப்பறை வசதி உள்ளிட்டவைகளை ஏற்படுத்துவதுடன், வட்டாட்சியர் அலுவலகத்தை தூய்மையாக பராமரித்திட அனைத்து பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
மேலும் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வருகைத்தரும் சாலை வசதிகளை மேம்படுத்தவும் தொடர்புடைய அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
இவ்வாய்வின் போது வருவாய் வட்டாட்சியர் ஷாஜஹான், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் கிருஷ்ணராஜ் உள்ளிட்ட வருவாய்த்துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.