Perambalur Collector fined Rs 5,65,100 for 2,752 corona violations
பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:
கொரோனா பெருந்தொற்று நோயானது இரண்டாம் கட்டமாக தமிழகத்தில் அதிவேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் நோய் பராமல் தடுப்பதற்கும், அதற்கு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் தமிழ்நாடு அரசால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இதனை பொருட்படுத்தாமல் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி செயல்படுபவர்களுக்கு தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939ன் கீழ், அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.
பொது இடங்களில் முகக்கவசம் அணிய தவறும் பொதுமக்களுக்கு ரூ.200-ம், சமூக இடைவெளியை கடைபிடிக்கத் தவறும் பொதுமக்களுக்கு ரூ.500-ம் அபராதம் விதிக்கப்படும். மேலும் வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் திருமண மண்டபங்கள் போன்ற மக்கள் நெருக்கம் அதிகமாக கூடும் இடங்களுக்கு வரும் பொதுமக்கள் முகக்கவசம் அணியாத பட்சத்தில் அந்தந்த நிறுவனங்கள் மற்றும் திருமண மண்டபங்களுக்கு ரூ.5,000- அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட நிர்வாகத்தால் ஏற்கனவே அறிவிக்கப்ட்டு, தற்போது விதிகள் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில் சுகாதாதரத்துறை, காவல்துறை, வருவாய்துறை மற்றும் நகராட்சியின் மூலம் முகக்கவசம் அணியாத நபர்களிடம் 08.03.2021 முதல் அபராத தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் மார்ச் மாதத்தில் பெரம்பலூர் வட்டத்தில் 53 நபர்களிடமிருந்து ரூ.10,600ம், வேப்பந்தட்டை வட்டத்தில் 67 நபர்களிடமிருந்து ரூ.14,000ம், குன்னம் வட்டத்தில் 43 நபர்களிடமிருந்து ரூ.10,400ம், ஆலத்தூர் வட்டத்தில் 58 நபர;களிடமிருந்து ரூ.11,600ம், சுகாதாரத்துறையின் மூலம் 228 நபர;களிடமிருந்து ரூ.45,900ம், பெரம்பலூர; நகராட்சியின் மூலம் 263 நபர;களிடமிருந்து ரூ.58,900ம் என மொத்தம் 712 நபர;களிடமிருந்து ரூ.1,51,400 வசூலிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதத்தில் பெரம்பலூர் வட்டத்தில் 96 நபர்களிடமிருந்து ரூ.20,100ம், வேப்பந்தட்டை வட்டத்தில் 102 நபர்களிடமிருந்து ரூ.20,400ம், குன்னம் வட்டத்தில் 48 நபர்களிடமிருந்து ரூ.9,900ம், ஆலத்தூர் வட்டத்தில் 66 நபர்களிடமிருந்து ரூ.13,200ம், சுகாதாரத்துறையின் மூலம் 228 நபர்களிடமிருந்து ரூ.47,100ம், காவல்துறையின் மூலம் 999 நபர்களிடமிருந்து ரூ.2,04,800ம், பெரம்பலூர் நகராட்சியின் மூலம் 442 நபர்களிடமிருந்து ரூ.88,400ம், அரும்பாவூர் பேரூராட்சியின் மூலம் 12 நபர்களிடமிருந்து ரூ.2,400ம், பூலாம்பாடி பேரூராட்சியின் மூலம் 9 நபர்களிடமிருந்து ரூ.1,800ம், குரும்பலூர் பேரூராட்சியின் மூலம் 13 நபர்களிடமிருந்து ரூ.2,600ம், லப்பைக்குடிக்காடு பேரூராட்சியின் மூலம் 25 நபர்களிடமிருந்து ரூ.5,000ம், என மொத்தம் 2,040 நபர்களிடமிருந்து ரூ.4,13,700 வசூலிக்கப்பட்டுள்ளது.
இதுவரை பெரம்பலூர் மாவட்டத்தில் 2,752 நபர்களிடமிருந்து ரூ.5,65,100 அபராதமாக விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டுள்ளது. அபராதம் விதிப்பது மாவட்ட நிர்வாகத்தின் முக்கிய நோக்கமல்ல மாறாக அனைவரையும் நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பதே முக்கிய நோக்கமாகும். எனவே பொதுமக்கள் கொரோனா வைரஸ் நோய் தொற்றின் அபாயத்தினை உணர;ந்து அத்தியாவசியமின்றி வெளியில் வருவதை தவிர;த்து, பொதுமக்கள் ஒவ்வொருவரும் நோயிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.