Perambalur: Collector informs to link cell phone number with RC to pay vehicle fines online!
போக்குவரத்து விதிகளை மீறி பொதுச்சாலையில் இயக்கப்பட்ட வாகனங்களுக்கு நிலுவையிலுள்ள ஆன்லைன் இணக்க கட்டணங்கள் (E-challan) உடனடியாக செலுத்திட போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரக கூடுதல் போக்குவரத்து ஆணையர், சென்னை அவர்களின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்களது வாகனங்களுக்கு ஆன்லைன் மூலமாக E-challan செலுத்துவதற்கு ஆதார் எண்ணில் உள்ள கைபேசி எண்ணை தங்களது வாகனம் பதிவு செய்யப்பட்டுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் அனைத்து வேலை நாட்களில் Parivahan இணையதளத்தில் பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும் என கலெக்டர் கிரேஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.