Perambalur: Collector who does not live in the village; People demand the disqualification of the collector who does not know Tamil and is working against the Tamil Nadu government’s plan!
பெரம்பலூர் கலெக்டராக இருப்பவர் கிரேஸ் லால் ரிண்டகி பச்சாவ். மிஷோரோமை சேர்ந்தவர். இவருடைய தந்தை அந்த மாநிலத்தில் ஷீஃப்-செக்ரட்ரியாக இருந்துள்ளார். பெங்களூரில் சட்டம் படித்த இவர், தந்தையின் வழிகாட்டலோடு குரூப் தேர்வு எழுதி பாஸாகி தாராபுரம் பகுதியில் சப்-கலெக்டராகி தற்போது பெரம்பலூர் கலெக்டராக உள்ளார்.
தமிழ்நாடு அரசின், முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும், வட்ட அளவில் பிரதி மாதம் 3வது புதன்கிழமை கலெக்டர் மற்றும் அனைத்து மாவட்ட முதல்நிலை அலுவலர்கள் கிராமங்களில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்தும், மக்களின் குறைகளைக் கேட்டறிந்து மனுக்கள் பெற்று நடவடிக்கை எடுப்பதும், அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி மக்களைச்சென்று அடைவதை உறுதி செய்ய ஆய்வு மேற்கொள்ளும் பொருட்டே இந்த இந்த திட்டத்தின் நோக்கமாகும்..
ஆனால், பெரம்பலூர் மாவட்டத்தில் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் அந்த கிராமங்களில் தங்குவதே இல்லை. இதே போல நேற்று பெரம்பலூர் அருகே உள்ள கவுள்பாளையம் கிராமத்தில் நடந்த உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தில் கிராமத்தில் தங்க வேண்டிய கலெக்டர் கிரேஸ் லால் ரிண்டகி பச்சாவ் தங்காமல் கலெக்டர் பங்களாவிற்கு வந்துவிட்டார். மேலும், காலையில் மீண்டும் கிராமத்தில் தங்கியது போல் கிராமத்திற்கு சென்றார். இது பொதுமக்களை ஏமாற்றுவதுடன், தமிழ்நாடு அரசை ஏமாற்றும் விதமாகவும் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” என்ற திட்டத்திற்கு எதிராகவும் கலெக்டர் செயல்படுகிறார்.
அரசியல்வாதிகள், அதிகாரிகள், பொதுமக்கள் எவரையும் கலெக்டர் மதிப்பதில்லை. மேலும், தமிழ் எழுத படிக்க, பேச கலெக்டருக்கு தெரியவில்லை. அரசு விதிப்படி IAS, IPS அதிகாரிகள் எந்த மாநிலத்தில் வேலை செய்கிறார்களோ, அந்த மாநிலத்தின் மொழியை எழுதப் படிக்க தெரிருக்க வேண்டும். ஆனால், பெரம்பலூர் கலெக்டர் கிரேஸ் லால் ரிண்டகி பச்சாவிற்கு எழுத, பேச, படிக்க தெரியவில்லை. இவர் தமிழ் தேர்வை எப்படி எழுதினார்,. என்ற சந்தேகமும், பொதுமக்களுக்கு எழுந்துள்ளது. மேலும், கலெக்டருக்கு உண்மையில் எழுதப் படிக்க தெரியுமானால், பொது வெளியில் மக்கள் முன்பு எழுதி, படித்து, பேச செய்ய வேண்டும். டிரான்ஸ்லேட் தங்கீலீசில் எழுத படிக்க கூடாது என்றும், அதுவரை கலெக்டரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் தொடர்ந்து திராவிட மாடல் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மும்மொழி கொள்ளைகை எதிர்க்கும் திராவிட மாடல் ஆட்சியில் தமிழ் தெரியாத ஹிந்தி கலெக்டர் என்றும், கலெக்டரிடம் பேச வேண்டுமானால் ஹிந்தி, இங்கிலீஷ் தெரிய வேண்டும் போல பொதுமக்கள் கிண்டலடிக்கின்றனர்.
பொதுமக்களின் இது போன்ற பிரச்சனைகளை எதிர்க்கட்சிகள் கண்டு கொள்வதே இல்லை! மாறாக அவர்கள் ஓட்டுக்கு ஆயிரம் கொடுத்தாவது, எம்.எல்.ஏ ஆகி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் மட்டுமே செயல்படுகின்றனர் என பொதுமக்கள் எதிர்க்கட்சிகளை வசைபாடுகின்றனர். சேவை செய்யும் மனமில்லாமல், மக்கள் வரிப்பணத்தில், Royal Life வாழ நினைக்கும், இது போன்ற கலெக்டரை தகுதி நீக்கம் செய்வதே முன்மாதிரியாக இருக்கும் என பொதுமக்கள் தங்கள் கருத்துகளை அரசுக்கு முன் வைக்கின்றனர்.