Perambalur: Collector working unwillingly; One hour delay in receiving petitions at public grievance redressal meeting: Public suffers!
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடப்பது வழக்கம். அது இன்று காலை கலெக்டர் கிரேஸ் தலைமையில் 10:30 மணிக்கு ஆரம்பிக்க வேண்டும். ஆனால் மணி சுமார் 11:30 மணி ஆகியும் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறாமல், அதிகாரிகள் குறைதீர்க்கும் கூட்டத்திலேயே விவாதித்துக் கொண்டிருந்தனர் குழந்தைகளுடன் வந்தவர்கள், முதியோர்கள் நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள் கடும் அவதி அடைந்தனர்.
வழக்கம் போல் காலை 10 30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணிக்கு முடியும். ஆனால், சுமார் ஒரு மணி நேரம் கால தாமதமாக குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு பெற்றுக் கொண்டதால், மனு கொடுக்க வந்தவர்கள் காத்திருந்து கடும் அவதிப்பட்டனர். அதிகாரிகள் மக்களை மதிப்பதே இல்லை. மக்கள் வரிப்பணத்தில் உல்லாசமாக வாழும் அவர்கள் அவர்களின் குறையைக் கேட்க ஒதுக்கும் 3 மணி நேரத்தில் கூட ஒரு மணி நேரத்தை வீணடித்த சம்பவம் மனு கொடுக்க வந்தவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும், தற்போது வேலை பார்க்கும் கலெக்டர் கிரேஸ் விருப்பம் இல்லாமல் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். கலெக்டருக்கு ஏழை – எளியவர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதிலோ, அல்லது அவர்களின் வாழ்க்கை தரத்தை மாற்றுவதிலோ குறைந்த ஆர்வம் கூட தற்போதைய கலெக்டருக்கு இல்லை. இதுவே, அதிகாரிகளுக்கு கொண்டாட்டமாகி விட்டது.
பெரம்பலூர் மாவட்டத்திற்கு முன்னாள் இருந்த கலெக்டர் கற்பகம் போன்றவர்களை நியமிக்க வேண்டுமென பொதுமக்கள் முதலமைச்சருக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.