Perambalur Collector’s Public Relations Camp at Kalpadi Village
பெரம்பலூர் அருகே உள்ள கல்பாடியில், மக்கள் தொடர்பு திட்ட முகாமில் கலெக்டர் வெங்கடபிரியா கலந்து கொண்டு 129 பயனாளிகளுக்கு ரூ.96.71 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன் முன்னிலையில் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, ஊட்டச்சத்து மாதம் குறித்த கண்காட்சியினையும், விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினையும், தொடங்கி வைத்து பெண்களிடையே ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அமைக்கப்பட்டிருந்த தன் புகைப்படம் எடுக்கும் அமைப்பில் புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேலும் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியினை கலெக்டர் வாசிக்க அனைத்து துறை அலுவலர்களும் ஏற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ. அங்கையற்கண்ணி, ஆர்.டி.ஓ. நிறைமதி, ஊராட்சித் தலைவர் சக்திவேல் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள், பயனாளிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
விளம்பரம்: